Breaking

Tuesday, December 30, 2025

சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்



சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம் Equal pay for equal work - Secondary school teachers continue their protest for the 5th day.

இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடுவித்தனர்.

இரண்டாவது நாளாக 27-ந்தேதி, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.

மூன்றாம் நாளாக நேற்று முன் தினம் சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். நேற்று உழைப்பாளர் சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி மெரினா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

2019 மே 31 தேதியில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடுகள் உள்ளது.

இதனால் சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் நாள் பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன்பும், இரண்டாவது நாள் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும், மூன்றாவது நாளான நேற்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயிலில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (டிசம்பர் 29) நான்காவது நாளாக மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்த போது இடைநிலை ஆசிரியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அரசுக்கு எதிராகவும் போலீசாருக்கு எதிராகவும் ஆசிரியர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த சமயத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆசிரியை மயக்கமடைந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்களத்தில் இருந்த ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறுகையில், ‘ 16 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். அரையாண்டு விடுமுறையில் குழந்தைகளை விட்டுவிட்டு வந்து போராடுகிறோம். இத்தனை வருடங்களாக அமைதியாக தான் போராடினோம். நடுரோட்டில் அமர்ந்து போராடவில்லையே. எங்களை இங்கு அமர வைத்தது யார்… நீங்கள்தானே… எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் எங்களது போராட்டம் தொடரும்’ என்று கூறினர்.

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment