Breaking

Sunday, December 28, 2025

முதல்வரின் கல்வி உதவித்தொகை - ஜன. 31ல் திறனாய்வு தேர்வு



முதல்வரின் கல்வி உதவித்தொகை - ஜன. 31ல் திறனாய்வு தேர்வு Chief Minister's educational scholarship - Aptitude test on January 31st.

முதல்வரின் கல்வி உதவித்தொகை ஜன. 31ல் திறனாய்வு தேர்வு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு முதல்வரின் கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு, முதல்வரின் திறனாய்வு தேர்வு 2026 ஜன., 31 ல் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் - கள் இடைநிற்றல் இன்றி உயர்கல்விக்கு செல்லும் நோக்கில், திறனாய்வு தேர்வு நடத்தி தேர்ச்சிபெறும் 1000 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை 10ம் வகுப்பில் இருந்து இளங்கலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை வழங்கப்படும். இதற்காக நடத்தப்படும் முதல்வரின் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 500 மாணவர், 500 மாணவிகள் என 1000பேருக்கு வழங்கப்படும்

இத்தேர்வில் 9 மற்றும் 10ம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இருந்து கொள்குறிவகை வினாக் கள் கேட்கப்படும்.

கணி தம் 60 வினாக்கள், அறிவி யல், சமூக அறிவியல் 60 வினாக்கள் வீதம் 2தாள்களாக தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் www.dge. tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.50ஐ டிச., 26க்குள் அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment