அரசு பள்ளி மாணவர்களுக்கு 'பாட்டரி டெஸ்ட்' 'Battery test' for government school students.
அரசு பள்ளிகளில், உலகத் திறனாய்வு தேர்வு வாயிலாக மாணவர்களை தேர்வு செய்யும் பணியை, 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 6, 7 மற்றும் சம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விளையாட்டு திறன்களை கண்டறியும் பொருட்டு, 'பாட்டரி டெஸ்ட் எனும் உலகத் திறனாய்வு தேர்வு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதில், மாணவர்களின் உயரம், உடல் எடை, வேகம், நிலைப்புத் தன்மை, வலிமை, நீண்டநேரம் சக்தியை செலவிடுதல், உடலியக்க மாறுபாடு ஆகியவற்றின் கீழ், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 200, 800, மற்றும் 1,300 மீ., ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக, பள்ளிகளில் பதிவேடும் பராமரிக்கப்படுகிறது. இருப்பினும், பல பள்ளிகளில் அதற்கான பணி, மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், வரும், 31ம் தேதிக்குள், பாட்டர் டெஸ்ட்' பணிகளை முடிக்க, உடல்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர்
வழக்கமாக, பள்ளி அளவில் பாட்டரி டெஸ்ட் முடித்தால், மாவட்ட விளையாட்டு நடத்தி மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்து விளங்கும் தலா, மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, மாவட்ட அளவில் போட்டி நடத்தி, முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறு வோருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். தொடர்ந்து, மண்டலபோட்டி நடத்தி, ஒவ்வொரு போட்டியிலும் தலா, 10 பேர் தேர்வு செய் யப்பட்டு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அரசு விளை முன்னுரிமையும் அளிக்கப்படும்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் மாவட்ட, மண்டல போட்டிகள் நடத்தப்படவில்லை. அதனால், பல பள்ளிகளில் பாட்டரி டெஸ்ட்' பணி மேற்கொள்வதில் கணக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment