அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Conducting Thirukkural and Chess competitions for students in all high/secondary schools - Procedures of the Director of School Education
அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் - மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு
திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 30-10-2025
பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் - மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 30-10-2025 பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் - மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு.
பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் விஐடி போபால் இணைந்து மாநில அளவில் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம்வகுப்பு பயிலும் (14வயதுகுட்பட்டவர்கள்) மாணவர்களுக்கான திருக்குறள் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருக்குறள் போட்டியில் கலந்துகொள்ள நல்லொழுக்கம் மற்றும் அறிவு இரண்டையும் ஊக்குவிக்க தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தின் கிராமப்புற அரசுப் பள்ளிகளிலிருந்து கல்வியில் முதலிடம் வகிக்கும் இரண்டு மாணவர்கள் (ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியர்) வீதம் ஒரு பெற்றோர் அல்லது ஒரு ஆசிரியர் உடன் விஐடி வேலூர் வளாகத்திற்கு 22.11.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குள் வருகை புரிதல் வேண்டும்.
சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ள மாவட்ட அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சதுரங்கப் போட்டியில் சிறந்த இரண்டு மாணவர்கள் (ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியர்) வீதம் ஒரு பெற்றோர் அல்லது ஒரு ஆசிரியர் உடன் விஐடி வேலூர் வளாகத்திற்கு 22.11.2025 சனிக்கிழமைகாலை 10.00 மணிக்குள் வருகை புரிதல் வேண்டும்.
தொலைதூர மற்றும் வெளி மாவட் ங்களிலிருந்து வருபவர்கள் 21.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை தங்கும் இடவசதி பல்கலைக்கழக நிர்வாகத்தால் செய்து தரப்படும் எனவும், கீழ்குறிப்பிட்ட தொடர்பு அலுவலர்களுக்கு முன்னரே தெரிவித்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் வரும்போது எடுக்கப்பட்ட பயணச்சீட்டு அளித்தவுடன் இருவழிப் பயணக்கட்டணம் விஐடி பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநில அளவிலான போட்டியில் முதல் பத்து வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் வெற்றியாளர் சான்றிதழ் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தாளாளர் அவர்களால் வழங்கப்படும். முதல் பரிசு வென்றவருக்கு ரொக்கப்பரிசுடன் வேந்தர் கோப்பையும் வழங்கப்படும். மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி 08.11.2025-மேலும் போட்டியில் பங்குபெற உள்ள மாவட்ட அளவிலான மாணவர்களின் விவரங்களை கீழ்குறித்த படிவத்தில் திருக்குறள் போட்டிக்கு தனியாகவும் சதுரங்க போட்டிக்கு தனியாகவும் பூர்த்திசெய்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(முதல் சுற்று: (30 மதிப்பெண்கள்}}
கொடுக்கப்பட்ட பத்து அதிகாரங்களில் இருந்து போட்டியாளர்கள் ஏதாவது மூன்று அதிகாரத்தில் உள்ள குறள்களை (30 குறள்கள்) சரியாகவும், சரளமாகவும் சரியான உச்சரிப்புடனும் கூறுதல் வேண்டும்.
(இரண்டாம் சுற்று: (20 மதிப்பெண்கள்}}
1. ஒரு குறளின் அதிகாரத்தை கொடுத்து அதற்க்கான திருக்குறளை கூற சொல்லுதல்
2. ஒரு குறளின் தொடக்க சொல் கூறி குறளைக் கூற சொல்லுதல்,
3. ஒரு குறளின் இறுதி சொல் கொடுத்து அதற்க்கான திருக்குறளை கூற சொல்லுதல்.
(இறுதி சுற்று);
நடுவர்கள் கேட்கும் அதிகரத்தில் இருந்து ஒரு குறளைக் கூறி அதன் பொருளை மனப்பாடமாக ஒப்புவிக்காமல், அந்த குறளின் பொருள் உணர்ந்து கூறுதல் வேண்டும்.
மேலும் அந்த பொருளை ஒத்த வரலாற்று நிகழ்வு / சமகால நிகழ்வு /தினசரி நிகழ்வு / என்று ஏதேனும் ஒன்றை ஒப்பிட்டு கூற வேண்டும். (உதாரணமாக கேட்கபடும் கேள்விகள்):
அறம் என்கிற வார்த்தையில் முடியம் குறள் கூறுங்கள்
நன்றி பற்றிய திருக்குறள் கூறுங்கள்
கல்வி அதிகாரத்திலிருந்து ஒரு குறள் கூறுங்கள்
அகர என்னும் வார்த்தையில் தொடங்கும் குறள் கூறுங்கள்
CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment