Breaking

Wednesday, July 15, 2026

ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி!விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை



ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி!விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!

பள்ளிக் கல்வித் துறையில் ஒரே அலுவலகத்தில் ஒரே பதவியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அலுவலா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் ஒரே அலுவலகத்தில் ஒரே பதவியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அலுவலா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில், பணியிடத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 என்ற தேதியில் கட்டாய மாறுதல் அளிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டில் ஜூன் 30 என்ற குறிப்பான தேதியின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்களுக்கு கடந்த ஜூன் 29-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கண்காணிப்பாளா்கள் மற்றும் பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா்கள் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவா்களுக்கு கட்டாய மாறுதல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

எனவே, ஜூன் 30 நிலவரப்படி கண்காணிப்பாளா்கள் மற்றும் பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா்கள் ஒரே அலுவலகத்தில், ஒரே பதவியில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருபவா்கள் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்

No comments:

Post a Comment