KGBV School Recruitment 2026: தருமபுரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு!
தருமபுரி மாவட்டத்தில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2026!
தருமபுரி மாவட்டத்தில் சீஸ் தொண்டு நிறுவனம் (SEES NGO) மற்றும் தாய்மை அன்புக்கரங்கள் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் KGBV மற்றும் NSCBAV உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்ற பெண் ஆசிரியைகள் தேவைப்படுகிறார்கள்.
📌 காலிப்பணியிடங்கள் மற்றும் பள்ளிகளின் விவரம்:
| வ.எண் | உண்டு உறைவிடப் பள்ளியின் பெயர் | காலிப்பணியிட பாடம் | எண்ணிக்கை |
|---|---|---|---|
| 1 | KGBV உண்டு உறைவிடப் பள்ளி, காரிமங்கலம் | அறிவியல் | 01 |
| கணிதம் | 02 | ||
| 2 | KGBV உண்டு உறைவிடப் பள்ளி, பாப்பாரப்பட்டி | அறிவியல் | 01 |
| சமூக அறிவியல் | 01 | ||
| கணிதம் | 01 | ||
| 3 | KGBV உண்டு உறைவிடப் பள்ளி, அமானிமல்லாபுரம் | சமூக அறிவியல் | 01 |
| 4 | KGBV உண்டு உறைவிடப் பள்ளி, பெண்ணாகரம் | தமிழ் | 01 |
| அறிவியல் | 01 | ||
| சமூக அறிவியல் | 01 |
🎓 கல்வித் தகுதி (Educational Qualification):
- தமிழ், கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல்), வரலாறு போன்ற பாடங்களில் இளங்கலை பட்டம் (UG Degree) பெற்றிருக்க வேண்டும்.
- B.Ed. (பொதுக் கல்வி) முடித்திருக்க வேண்டும்.
- ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Pass) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
⚠️ வேலைக்கான நிபந்தனைகள்:
- மேற்கோள் காட்டப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது.
- தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியைகள் உண்டு உறைவிடப் பள்ளிகளிலேயே தங்கி பணிபுரிய வேண்டும்.
- பெண்கள் மட்டுமே இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
- மாத ஊதியம்: ₹ 24,000/- (தொகுப்பூதியம்).
📩 விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டிய சுய விவர படிவம் (Resume/Bio-data), சுய சான்றொப்பமிட்ட அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் முன்அனுபவ சான்றுகளுடன் கீழ்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாக அனுப்ப வேண்டும்.
📮 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
KGBV உண்டு உறைவிடப் பள்ளி
(அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம்)
காரிமங்கலம், தருமபுரி மாவட்டம் - 635111.
⏰ முக்கிய தேதிகள் & தொடர்புக்கு:
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2026 மாலை 5.00 மணிக்குள்.
- தொடர்பு எண்கள்: 97863 96447, 97867 05157, 95977 76302, 88382 10490

No comments:
Post a Comment