Breaking

Monday, July 20, 2026

மாதிரிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடையாது: கல்வித் துறை



மாதிரிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடையாது: கல்வித் துறை

No Transfers for Model School Teachers: The Department of School Education has announced that teachers currently working in Government Model Schools will not be transferred, even if they participated in the general transfer counseling.

Continued Service: Teachers who secured transfers to other government schools during counseling must continue working in their current Model Schools until they receive formal relieving orders.

Temporary Appointments: To avoid disrupting education in Model Schools, management committees are authorized to appoint temporary teachers while permanent teachers are being relocated.

சென்னை, ஜூலை 20: தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள், பொது மாறுதல் கலந்தாய்வின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றிருந்தாலும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர்கள் தொடர்ந்து மாதிரிப் பள்ளிகளிலேயே மாற்றுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் கீழ் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப் பணி மற்றும் நிரந்தரப் பணியிடங்களில் பணியாற்றி வரும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு கடந்த ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளைத் தேர்வு செய்து, தங்களுக்கான பணிமாறுதல் ஆணைகளைப் பெற்றனர்.

இந்நிலையில், மாதிரிப் பள்ளிகளின் நிர்வாகத் தேவைகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பயிற்சிகள் மற்றும் மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அந்த ஆசிரியர்கள் தொடர்ந்து மாதிரிப் பள்ளிகளிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் உறுப்பினர் செயலர் பள்ளிக் கல்வித் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று, புதிய பள்ளிகளில் பணியேற்றுள்ள முதுநிலை ஆசிரியர்கள், தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், அவர்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் கீழ் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகளில் மறு உத்தரவு வரும் வரை மாற்றுப் பணியில் பணியாற்றும் வகையில் பணி விடுப்பாணை வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: மாதிரிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவதால், அவர்கள் பணியாற்ற வேண்டிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்க, அந்தப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்றும், அவர்களுக்கான ஊதியத்தை தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் குழுமமே வழங்கும் என்றும் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம், அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.



மாதிரிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல தற்காலிகத் தடை Temporary ban on transfers for teachers working in model schools.

அரசு மாதிரிப் பள்​ளி​களில் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​கள் பணி மாறு​தலில் செல்ல பள்​ளிக்​கல்​வித் துறை தற்​காலிக​மாக தடை விதித்​துள்​ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை: தமிழகத்​தில் 38 மாவட்​டங்​களி​லும் அரசு மாதிரிப் பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன.

மாற்​றுப் பணி மற்​றும் பணி மாறு​தலில் இப்​பள்​ளி​களில் பணி​யாற்றி வரும் முது​நிலை ஆசிரியர்​கள், கணினி பயிற்​றுநர்​கள் கடந்த ஜூலை 8-ம் தேதி நடை​பெற்ற பொது மாறு​தல் கலந்​தாய்​வில் பங்​கேற்க அனு​மதி வழங்​கப்​பட்​டது. இதையடுத்​து, முது​நிலை ஆசிரியர்​கள் கலந்​தாய்​வில் பங்​கேற்று வேறு மேல்​நிலைப் பள்​ளி​களை தேர்வு செய்து இடமாறு​தல் ஆணை​களைப் பெற்​றனர். தற்​போது நிர்​வாக காரணங்​களுக்​காக​வும், ஏற்​கெனவே ஆசிரியர்​களுக்கு மாதிரிப் பள்​ளி​களில் சிறப்பு பயிற்​சிகள் அளிக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், மாதிரிப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​கள் நலன் கரு​தி​யும் அந்த ஆசிரியர்​கள் தொடர்ச்​சி​யாக மாதிரிப் பள்​ளி​யிலேயே மாற்​றுப் பணி​யில் ஈடுபட ஆணை வழங்​கு​மாறு தமிழ்​நாடு மாதிரிப் பள்​ளிக் குழு உறுப்​பினர் செயலர் கேட்டுக் கொண்​டுள்​ளார்.

அதை ஏற்​று, பொது மாறு​தல் கலந்​தாய்​வில் கலந்​து​கொண்டு பணி மாறு​தல் பெற்று சம்​பந்​தப்​பட்ட பள்​ளி​யில் பணி ஏற்​றுக்​கொண்ட முது​நிலை ஆசிரியர்​களுக்கு மீண்​டும் மாதிரிப் பள்​ளி​களி​லேயே மாற்​றுப் பணி வழங்​கப்​படு​கிறது. மறு உத்​தரவு வரும் வரை மாதிரிப் பள்​ளி​களில் அவர்​கள் மாற்​றுப்பணி​யில் ஈடு​படும் வகை​யில் பணி விடு​விப்பு ஆணை வழங்க வேண்​டும். அவர்​கள் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில் பணிபுரிய​வில்லை என்​பதை உறு​தி​செய்ய சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும்.

அதே​போல, மாதிரிப் பள்​ளி​களில் மாற்​றுப் பணிக்​குச் செல்​வ​தால் அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் பணியை தொடர, பள்ளி மேலாண்​மைக் குழு (எஸ்​எம்​சி) மூல​மாக தற்​காலிக ஆசிரியர்​களை நியமிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment