Breaking

Monday, July 20, 2026

பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' வீடியோ: மாணவர்களை கண்காணிக்க வலியுறுத்தல்



This Tamil news article highlights concerns about students using mobile phones to create Instagram Reels inside classrooms.

Issue: Teachers are urged to monitor and restrict student mobile phone usage during school hours after reports of students filming Reels in classrooms.

Context: While phone use was permitted during remote learning, some students are now secretly bringing phones to school and using them inappropriately.

Impact: Social activists argue that this behavior negatively affects students' education and have called for educational authorities to take action.

பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' வீடியோ: மாணவர்களை கண்காணிக்க வலியுறுத்தல்

செய்யூர், ஜூலை 20-

அரசு பள்ளிகளில் பள்ளி நேரத்தில் மாணவ - மாணவியர் சிலர் மொபைல் போன் பயன்படுத்துவதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்தாமூர், பவுஞ்சூர், சூணாம்பேடு, கூவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்குகின்றன.

கொரோனா கால கட்டத்தில் மாணவர்கள் கல்வி பயில, ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் பெரும்பாலான மாணவ - மாணவியரின் பெற்றோர், புதிதாக மொபைல் போன் பயன்படுத்த அனுமதித்தனர்.

ஆனால், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் சிலர் மொபைல் போனை மறைமுகமாக எடுத்து சென்று வகுப்பறைகளில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து சமூகவலைதளமான 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை பதிவிடுகின்றனர். இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment