Breaking

Wednesday, September 2, 2026

தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு: 2021-2026 ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து!



தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு: 2021-2026 ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுவது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110-இன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், 2021-2026 ஆட்சிக் காலத்தில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் முழுமையாக ரத்து!



சென்னை (02.09.2026): தங்களது வாழ்வாதாரத்திற்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது முந்தைய ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் மனிதநேய அடிப்படையில் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் (செய்தி வெளியீடு எண்: 20) தெரிவிக்கப்பட்டுள்ள முழுமையான விவரங்கள் வருமாறு:



வெளிப்படையான மற்றும் ஜனநாயக ரீதியிலான அரசு:



சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், "நமது அரசு பொறுப்பேற்ற மே 10-ஆம் தேதி முதல், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாகச் சேவையாற்றி வருகிறது. மக்களின் கருத்துரிமை, போராட்ட உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை மதித்து, சட்டத்திற்குட்பட்டு மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான சூழலை இந்த அரசு உறுதிப்படுத்தி வருகிறது" எனக் குறிப்பிட்டார்.



2021 - 2026 ஆட்சிக் காலப் வழக்குகள் பின்னணி:



கடந்த ஆட்சிக் காலங்களில் (2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை) தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



ஜனநாயக முறையில் குரல் கொடுத்த மக்களுக்கு உரிய அனுமதிகள் மறுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளால் இன்று வரையிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



1. விவசாயிகள் மற்றும் உழவர்கள் மீதான வழக்குகள் ரத்து:



உழவர்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் அடிப்படையாக விளங்கும் சமூகத்தின் முதுகெலும்பாகப் போற்றப்பட வேண்டியவர்கள். அவ்வாறான உழவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.



  • திருவண்ணாமலை சிப்காட் போராட்டம்: திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சிலர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.


  • பரந்தூர் புதிய விமான நிலையப் போராட்டம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு போராடிய விவசாயிகள் மீது முந்தைய அரசால் மனிதநேயமற்ற முறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இவை அனைத்தும் தற்போதைய அரசால் முழுமையாகத் திரும்பப் பெறப்படுகின்றன.



2. ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து:



கல்வியின் ஒளியை ஏற்றி சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆசிரியர்கள் நாட்டின் வளர்ச்சியின் அடித்தளமாக உள்ளனர். ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் போராடியபோதும், அவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.



மனிதநேய அடிப்படையில் அரசினுடைய அதிரடி முடிவு:



எனவே, ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற முடிவு செய்துள்ளது என்பதை முதலமைச்சர் பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.



"விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும். இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்." - முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்.



No comments:

Post a Comment