Breaking

Friday, July 17, 2026

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் - கருவூலத்துறை முக்கிய உத்தரவு

This Tamil-language news article details a government directive regarding interim relief payments:

Interim Relief for Pensioners: The Tamil Nadu government has ordered interim relief for government employees and teachers who retired under the contributory pension scheme.

Implementation Directive: Treasury departments must process these relief payments promptly, with instructions to use the Integrated Financial and Human Resources Management System (IFHRMS) for processing.

Action Required: Concerned officials must ensure correct employee details are uploaded, maintain separate records for the relief, and ensure payments are disbursed by the last working day of each month

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம்

கருவூலத்துறை முக்கிய உத்தரவு

நெல்லை, ஜூலை 16: தமிழ்நாடு உறுதி அளிக்கப் பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க கருவூல கணக்குத் துறை உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக கருவூல கணக்குத் துறை இயக்குநர் அனைத்து மண்டல இணை இயக்குநர்கள், சம்பள கணக்கு அலுவலர்கள், கரு வூல அலுவலர்களுக்கு பிறப் जनन 2: 1.1.2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற, பணியிடை மரணமடைந்த பணியாளர் களுக்கு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணம் வழங்குவதற் கான நடவடிக்கைகள் ஐஎப் எச்ஆர்எம்எஸ்-ல் (IFHRMS) துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவே அனைத்து சம்ப ளக் கணக்கு அலுவலர்கள், கருவூல அலுவலர்கள் தங் கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகின்ற னர். ஓய்வு பெறும் பணி யாளரின் பணிப்பதிவேடு (இ-எஸ்ஆர்) மற்றும் இதர விவரங்கள் ஐஎப்எச்ஆர்எம் எஸ்-ல் முழுமையாக சரி பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணம் வழங்குவதற் கான கருத்துருக்கள் மற்றும் தேவையான விவரங்கள் ஐஎப்எச்ஆர்எம்எஸ்-ல் பதி வேற்றம் செய்ய வேண்டும்.

பணியாளரின் பெயர், பணி யாளர் குறியீட்டு எண், ஓய்வு நாள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல் கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேவையான இணைப்புகள் மற் றும் ஆவணங் கள் ஐஎப்எச் ஆர்எம்எஸ்-ல் பதி வேற்றம் செய்யப்பட்டு நிர்ணயிக் கப்பட்ட வழி முறை யில் அனுப்பப்பட வேண்டும்.

ஐஎப்எச்ஆர் எம்எஸ்-ல் எழும் குறைகள் மற்றும் ஆட்சேபனைகள் உடன டியாக சரி செய்யப்பட்டு முன்மொழிவுகள் தாமத மின்றி செயல்படுத்தப்பட வேண்டும்.

இடைக்கால ஓய்வூதி யம் தொடர்பான முன்மொ ழிவுகள் உரிய அலுவலரின் ஒப்புதலுக்குப் பிறகு கரு வூல இயக்குநரகத்திற்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் வழியாக அனுப்பப்பட வேண்டும். இயக்குநரகத்தில் இருந்து உரிய தொகை மாற்றத்திற் கான ஒப்புதல் ஐஎப்எச்ஆர் எம்எஸ் வழியாக பெறப் பட்டதும், அதன் மேல் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் தனியருக்கு பெற்று வழங்க வேண்டும். ப பின்னர் இடைக்கால நிவாரணம் பட்டியலை மாதம் தோறும் உரிய நேரத்தில் மாதத்தின் கடைசி வேலை நாளில் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் தெரிவித்து, அவற்றை முறை யாக பின்பற்றி இடைக்கால நிவாரணம் வழங்கும் பணி களை விரைவாக மேற்கொள் ளுமாறு அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் கள், கருவூல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் மண்டல இணை இயக்குநர்கள் இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு தங் கள் கட்டுப்பாட் டின் கீழ் உள்ள கருவூல அலு வலர்களுக்கு உரிய வழிகாட் டுதல் வழங்க வும் நேரடியாக செல் பாட்டை திறனாய்வு செய் யவும் அறிவுறுத் தப்படுகின்றனர்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



தனி பதிவேடு பராமரிப்பு

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய் வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில், வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத் தொகை யின் விவரங்களை தனி பதிவேடு கொண்டு பராமரிக்க வேண்டும்.

இடைக்கால ஓய்வூதி யம் வழங்கும் பணிகளில் எந்த தாமதமும் ஏற்படாத வகையில் பணம் பெற்று வழங் கும் அலுவலர்கள் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment