This Tamil news clipping reports on a tragic incident in Kanchipuram:
A 16-year-old girl named Balalakshna, a 11th-grade student at a private school hostel, reportedly died by suicide.
Her parents, residents of Tirunelveli working in Chennai, were notified by the school of the incident.
Police, including a child protection officer, are investigating the case from various angles
காஞ்சிபுரம் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம் தனியார் பள்ளி விடுதியில், பிளஸ் 1 மாணவி, பாலரக்ஷனா (16), நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் – மகாலட்சுமி தம்பதி. இவர்கள், சென்னை கீழ்க்கட்டளையில் தங்கி, பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, பாலரக்ஷனா (16), மோசிகா (9) என, இரு பெண் குழந்தைகள்.
மூத்த மகளான பாலரக்ஷனா, காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார்.
இந்நிலையில, நேற்று காலை தன் தாய் மகாலட்சுமியை, மொபைல் போனில் அழைத்து பாலரக்ஷனா பேசியுள்ளார். ஆனால், ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசி மொபைல் போனை வைத்து உள்ளார்.
இந்நிலையில், காலை 8:00 மணிக்கு, பள்ளியில் இருந்து அழைத்து, 'விடுதியில் தங்கியிருந்த உங்கள் மகள் தூக்கிட்டு கொண்டார்' என, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
தூக்கிட்டு கொண்ட மாணவியை, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்களின் பரிசோதனையில், மாணவி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். அங்கிருந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று, மகளின் உடலைப் பார்த்தனர்.
தகவலறிந்து, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அரவிந்த், பள்ளி கல்வித் துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி என, பல்வேறு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் தந்தை கார்த்திக், நிருபர்களிடம் கூறியதாவது: "என் மகள் எப்படி இறந்தார் என எங்களுக்கு தெரியவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் அனைவரிடமும் விசாரிக்க வேண்டும். என் வீட்டு உரிமையாளரின் மகள் இந்த பள்ளியில் படித்தார் என்பதற்காக என் மகளையும் சேர்த்தேன்.
ஆனால், இந்த பள்ளி மீது நம்பிக்கை இல்லை. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும்."
— இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி தற்கொலை செய்தது பற்றி, காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment