Breaking

Tuesday, July 21, 2026

கலைத் திருவிழா 2026-27 ஐயங்களுக்கு கீழ்காணும் பதில்கள் தரப்படுகின்றன



கலைத் திருவிழா 2026-27 ஐயங்களுக்கு கீழ்காணும் பதில்கள் தரப்படுகின்றன

கலைத் திருவிழா 2026-27 நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட ஐயங்களுக்கு கீழ்காணும் பதில்கள் தரப்படுகின்றன

1. கடந்த ஆண்டுகளில் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் இக்கல்வி ஆண்டிலும் கலந்து கொள்ளலாம்

2. கடந்த ஆண்டுகளில் பின்பற்றியதை போல இக்கல்வி ஆண்டிலும் அனைத்து போட்டிகளுக்கும் சினிமா பாடல்கள் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது .

3. 23-7-26 அன்று முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் school EMIS login கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஆகவே பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு உடனடியாக தத்தம் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு போட்டியிலாவது கண்டிப்பாக கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. பள்ளி அளவில் மாணவர்களை பதிவேற்றம் செய்வதற்கும் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை பதிவு செய்வதற்கும் எக்காரணத்தைக் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என மாநில திட்ட இயக்குநரகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே வழங்கிய சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தேதிகளை நினைவில் கொண்டு அதற்குள் அப்பணியினை முடித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

5. களிமண் சிற்பம் செய்தல் போட்டியில் கண்டிப்பாக இயற்கை களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்


கலைத்திருவிழா!

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்...

வரும் 23ம் தேதி முதல் நடத்த கல்வித்துறை உத்தரவு

மாநில போட்டிகளில் வெற்றி பெற்றால் ‘கலையரசன்’, ‘கலையரசி’ விருது

Event Name: "Kalaithiruvizha" (Art Festival) for school students in Tamil Nadu.

Target Schools: All government and government-aided schools.

Timeline: Competitions start on August 23rd, 2026, and run until October 28th, 2026.

Awards: Winners of state-level competitions will receive "Kalaiarasan" and "Kalaiarasi" awards, with top students potentially receiving educational trips abroad.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வரும் 23ம் முதல் ‘கலைத் திருவிழா’ போட்டிகள் நடத்த வேண்டும் என்று, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ‘கலைத்திருவிழா’ போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நடப்பு கல்வியாண்டிலும் கலைத் திருவிழா போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி, அக்டோபர் 28ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. 1, 2ம் வகுப்பு, 3 முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு, 9, 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு என 5 பிரிவுகளாக வயதுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, நாட்டுப்புறநடனம், பரதநாட்டியம், மணல்சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.

முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரையிலும், குறுவட்ட அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 19 முதல் 21ம் தேதி வரையும் நடைபெறும். தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 8 முதல் 15ம் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் 7 முதல் 28ம் தேதி வரையும் நடத்தப்படும்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ‘கலையரசன்’, ‘கலையரசி’ விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும். தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகளை, சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான பணிகளை, அந்தந்த மாவட்ட முதன்மைக்கலை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment