an article from January 7, 2026, where the Tamil Nadu Elementary School Teachers Federation urges the government to address the demands of secondary school teachers regarding salary discrepancies. The federation criticizes the government's perceived indifference and threats of action against protesting teachers, emphasizing that resolving the pay gap is a long-standing and crucial demand shared by various teacher associations.
Date: 07.01.2026
Organization: Tamil Nadu Elementary School Teachers Federation (and DITTOJAC)
Core Issue: Unresolved salary discrepancies for secondary school teachers
Demand: Government should immediately negotiate and resolve the issue or face intensified protests
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையில் அரசு அலட்சியம் காட்டாமல் உரிய தீர்வு காண வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் The government should not show indifference to the demands of secondary school teachers and should find a proper solution – Teachers' association urges.
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையில் அரசு அலட்சியம் காட்டாமல் உரிய தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்...
:07.01.2026
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையில் அரசு அலட்சியம் காட்டாமல் உரிய தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்புகளை சரி செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருந்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்து வருகிறதே தவிர இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கணக்கெடுப்பதாகவும். ஊதிய நிறுத்தம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் போராட்டத்தை நசுக்கி ஒடுக்கி விடலாம் என அரசு நினைக்கிறது. இதுபோன்ற எதிர்மறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். உடனடியாக போராட்டம் நடத்துபவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடுகளை சரி செய்து தர வேண்டுமென்பது போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கை மட்டுமல்ல. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்துகின்ற, போராட்ட களம்கண்டு வருகின்ற மிக முக்கியமான கோரிக்கையாகும். அதேபோல இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் அமைப்பும் வலியுறுத்தி வருகிறது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய ஏற்றத்தாழ்வை நியாயத்தின் அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்பது இளைய ஆசிரியர்களின் கோரிக்கை மட்டுமல்ல. மூத்த ஆசிரியர்களின் கோரிக்கையுமாகும் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே அரசு அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து தருகிறோமென்று ஏற்கனவே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. டிட்டோஜாக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளிடம் உறுதி அளித்ததை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதில் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுமேயானால் அனைவரும் இணைந்த தீவிரமான போராட்டம் தவிர்க்க இயலாதது ஆகிவிடும். உடனடியாக தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். இது அவசியமும் அவசரமுமானது ஆகும்.
என்றும் ஆசிரியர் நலனில்
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்...
No comments:
Post a Comment