Breaking

Tuesday, August 25, 2026

ஆசிரியர்கள் கவனத்திற்கு: டெட் (TET) தேர்வில் விலக்கு கிடைக்குமா? கானல்நீரை தேடி அலையாமல் உடனே படியுங்கள்!



ஆசிரியர்கள் கவனத்திற்கு: டெட் (TET) தேர்வில் விலக்கு கிடைக்குமா? கானல்நீரை தேடி அலையாமல் உடனே படியுங்கள்!

இதனால் என்ன பயன்? ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டாலும், அதனால் ஆன பயனென்ன? நடந்த விளைவென்ன என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

நாடு முழுமைக்குமான ஒரு பிரச்சனை இது. மாநில உயர்நீதிமன்றங்களை எல்லாம் தாண்டி உச்சநீதிமன்றம் சென்று, அங்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் சீராய்வு மனுவும் பரிசீலிக்கப்பட்டுவிட்டது. பணியில் உள்ள அனைவரும் மூன்று ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வேலையில் இருக்க முடியும்; தேர்ச்சி பெறாவிடில் (கழுத்தைப் பிடித்து) வெளியே தள்ளப்படுவர் என்றவாறு தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் மட்டுமே TET விலக்கு சாத்தியமாகும். இதைத் தவிர வேறு எதுவும் இந்தப் பிரச்சனையில் செய்ய முடியாது என்பதே தற்போதைய யதார்த்தம்.

மாநில அரசுக்குச் செய்வதற்கான வாய்ப்பும் அதிகாரமும் இருக்கின்ற இடங்களில் கூட, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ நிலைப்பாடு தெளிவாக எழுத்துப்பூர்வமாக கூறப்பட்டுவிட்டது.

இந்தக் கோரிக்கை, தீர்மானம், மத்திய அரசுக்கு வலியுறுத்தல் ஆகிய எதுவுமே உடனடியாக நாளைக்கே நடைமுறைக்கு வந்து விடாது.

ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் கெடு முடிந்து விட்டால், அதாவது ஆகஸ்ட் 2028 வந்துவிட்டால், தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் வீட்டிற்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போதே ஓராண்டு முடிந்து விட்டது; இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நமக்குக் காலம் உள்ளது.

புத்திசாலித்தனமான ஒரே வழி என்ன?

நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான். இப்போதிருந்தே படிக்கத் தொடங்கி, அடுத்து வருகின்ற தேர்வுக்குத் தயாராவது மட்டுமே புத்திசாலித்தனமான ஒரே வழியாகும்.

இலவு காத்த கிளியாக எவராவது ஏதாவது கருணை காட்டுவார்களா? விலக்கு தருவார்களா? தளர்வு தருவார்களா? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பது கானல்நீரைத் தேடி அலைவதைப் போன்றது.

படிப்பும் உழைப்பும் மட்டுமே நமக்கு உறுதுணை என்பதை மறவாதீர்கள். இன்றே, இப்போதே உங்கள் தயாரிப்பைத் தொடங்குங்கள். அடுத்த தேர்வில் வென்று நிம்மதியாக இருங்கள்!

No comments:

Post a Comment