Breaking

Saturday, July 11, 2026

தமிழக வெற்றி கழக ஆட்சியில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆசிரியர்கள்



தமிழக வெற்றி கழக ஆட்சியில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆசிரியர்கள்

*பணியில் உள்ள ஆசிரியர்கள் லட்சக்கணக்கானோர் கடந்த 04.07.2026(TET PAPER 1)மற்றும் 05.07.2026(TET PAPER 2) ஆசிரியர் தகுதி தேர்வை எழுதியுள்ளனர்.* இவர்கள் அனைவரும் பல ஆண்டுகால அனுபவம் மற்றும் உயர் கல்வி தகுதிகளை கொண்டவர்கள். இவர்களில் பல ஆயிரக்கணக்கானோர் TRB மூலம் போட்டித் தேர்வு எழுதி (Recruitment Exam)பணி நியமனம் பெற்றவர்கள். உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க பணியில் தொடர/ பதவி உயர்வு பெற அனைவரும் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

TET PAPER 2 தேர்வில் அவரவர் முக்கிய பாடங்களில்(MAIN SUBJECT)150 கேள்விகளில் 30 மதிப்பெண்கள் மட்டும்தான்.நாம் அனைவரும் வெவ்வேறு பாடங்களில் (Other subjects,excluding Psychology)தேர்வு எழுதியுள்ளோம்.

TET தேர்வுக்கு முன் தேர்தல் SIR பணிகள்,10 வகுப்பு பொதுத் தேர்வுகள்,தேர்தல் பணிகள், விடைத்தாள் திருத்தும் பணிகள், இதற்கிடையில் நமது அன்றாட பணிகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் தேர்வுக்கு கடினமாக படித்தோம்,எழுதினோம். ஆனால் வினாத்தாள்(TET PAPER 1 &TET PAPER 2)எவ்வளவு கடினமாக இருந்தது அனைத்து சங்கங்களும் கருத்து தெரிவித்திருந்தனர் இதில் பெண் ஆசிரியர்கள் தான் அதிகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆக பெண் ஆசிரியர்கள்/ ஆண் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, வயதான பெற்றோர்/ மாமியார்,மாமனார்,குழந்தைகள் அனைவரையும் பார்த்துக்கொண்டுதான் கடினமாக படித்து தேர்வு எழுதியுள்ளனர் என்பதை அனைவரும் அறிவர்.

ஆகையால் தமிழக அரசு

1)அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களது பணிக்காலம் மற்றும் உயர் கல்வித் தகுதிகளை கருத்தில் கொண்டு நியாயமான மதிப்பெண்கள் அளித்து (WEIGHTAGE) தேர்வு மதிப்பெண்கள் உடன் இணைத்து தேர்வு முடிவுகள்(TET JULY 2026 RESULTS) வெளியிடப்பட வேண்டும்.

2) TEACHERS ELIGIBILITY TEST(TET)என்பது நியமனத் தேர்வு அல்ல,அது ஒரு தகுதி தேர்வு மட்டும்தான் என்று அரசாங்கமே அறிவித்து அதனை பின்பற்றி வரும் நிலையில்,

அனைத்து ஆசிரியர்களுக்கும்

சமமான குறைந்தபட்ச தேர்ச்சி

மதிப்பெண்களை (EQUAL MINIMUM

PASSING MARK) நிர்ணயித்து

ஆணையிட வேண்டும் என்று

ஆசிரியர் சமுதாயம் மிகுந்த

எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடன்

காத்துக்கொண்டிருக்கிறது. அரசு ஆசிரியர்கள் பக்கம் துனண நிற்கும்

நன்றி 🙏🙏🙏🙏

No comments:

Post a Comment