Breaking

Thursday, June 18, 2026

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 23-ம் தேதி வெளியீடு



தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 23-ம் தேதி வெளியீடு Rank list for undergraduate courses at Tamil Nadu Agricultural University to be released on the 23rd.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 14 இளநிலை பாடப்பிரிவுகள், 3 டிப்ளமோ படிப்புகளும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பட்டப்படிப்புகளும் உள்ளன. வேளாண் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 8,103 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 340 இடங்களுக்கும் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நேற்று முன்தினத்துடன் விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைந்த நிலையில், வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டயப் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு வரும் 29-ம் தேதியும், பட்டப் படிப்புக்கான இணைய வழி கலந்தாய்வு ஜூலை 6 முதல் 12-ம் தேதி வரை யும் நடைபெறுகிறது. முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு ஜூலை 16-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20-ல் தொடங்கி ஆகஸ்ட் 27-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும். பொதுப் பிரிவினர் மற்றும் 7.5 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 9-ம் தேதி வேளாண் கல்லூரிகள் திறக்கப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்விப் பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற செல்போன் எண்ணிலும், ugadmissions@tnau.ac.in என்ற மெயில் மூலமாகவும், வார நாட்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்விப் பாடங்களுக்கான விவரங்களை 9865703537 என்ற செல்போன் எண்ணிலும் agridean2015@gmail.com என்ற மெயில் மூலமாகவும் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment