Breaking

Sunday, January 4, 2026

Hon'ble CM Press Release - TAPS Scheme - Final 03-01-2026 - TN CM TAPS 2026 | தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை சொல்வது என்ன ?- PDF



Hon'ble CM Press Release - TAPS Scheme - Final 03-01-2026 - PDF

செய்தி வெளியீடு எண்: 015

: 03.01.2026

செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட (Tamil Nadu Assured Pension Scheme - TAPS)" செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை!

ஆட்சி என்கிற வாகனத்தின் சக்கரங்களாக இருக்கக்கூடியவர்கள் அரசு அலுவலர்கள். அந்தச் சக்கரங்கள், மக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை கடைக்கோடி மனிதர் வரை கொண்டு சேர்க்கப் பயணிக்கின்றன. அதை உணர்ந்துள்ள அரசுதான் முத்தமிழறிஞர் கலைஞர் வழிவந்த திராவிட மாடல் அரசு. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் கலைஞர் வழியில் எப்போதும் அக்கறையுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

DIPR-P.R.NO-015-Hon'ble CM Press Release-TAPS Scheme-Final 03-01-2026 Click Here To Download PDF

No comments:

Post a Comment