Breaking

Thursday, July 30, 2026

அரசு உதவி பெறும் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2026 | PG Assistant & Art Teacher Jobs!


அரசு உதவி பெறும் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2026 | PG Assistant & Art Teacher Jobs!

S.L.N.M Higher Secondary School Teacher Recruitment 2026: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கரடிவாவியில் இயங்கி வரும் பிரபல S.L.N.M. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பள்ளியில் கணிதம் மற்றும் வரலாறு பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PG Assistant) மற்றும் ஓவிய ஆசிரியர் (Art Teacher) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விவரங்கள் சுருக்கம் (Job Summary)

விவரங்கள் செய்தி விவரம்
நிறுவனம் / பள்ளி S.L.N.M. மேல்நிலைப்பள்ளி (அரசு உதவி பெறுகப்பது)
பணியின் தன்மை நிரந்தர பணியிடம் (Permanent Job)
இடம் கரடிவாவி, பல்லடம் தாலுகா, திருப்பூர் மாவட்டம்
சம்பளம் தமிழக அரசு விதிகளின்படி (As per Govt Norms)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம் (Offline Application)
கடைசி நாள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 10 நாட்களுக்குள்

காலிப்பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்கள்

  • 1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணிதம் - PG Assistant Maths):
    • கல்வித்தகுதி: M.Sc., B.Ed., (கணிதப் பிரிவில் முதுகலை மற்றும் கல்வியியல் பட்டம்)
    • இனச்சுழற்சி (Turn): OC (GT) - பொதுப் போட்டி
  • 2. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு - PG Assistant History):
    • கல்வித்தகுதி: M.A., B.Ed., (வரலாறு பிரிவில் முதுகலை மற்றும் கல்வியியல் பட்டம்)
    • இனச்சுழற்சி (Turn): OC (GT) - பொதுப் போட்டி
  • 3. ஓவிய ஆசிரியர் (Art Teacher):
    • கல்வித்தகுதி: +2 / 12th Pass (+) TTC (Technical Teacher Certificate) அல்லது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி.
    • இனச்சுழற்சி (Turn): OC (GT) - பொதுப் போட்டி

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)

  1. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக் குறிப்பு (Resume / Bio-Data) ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
  2. விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்,
S.L.N.M. மேல்நிலைப்பள்ளி,
கரடிவாவி, பல்லடம் (தாலுகா),
திருப்பூர் மாவட்டம் - 641 658.

குறிப்பு: அனைத்து பணியிடங்களும் OC (GT) பிரிவின் கீழ் வருவதால் தகுதியுள்ள அனைத்துப் பிரிவினரும் (General / BC / MBC / SC / ST) இதற்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment