பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்: 28.07.2026 | செவ்வாய்க்கிழமை
📌 திருக்குறள் (Thirukkural)
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 46 - சிற்றினம் சேராமை
குறள் எண்: 459
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
பொருள்: மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.
📌 பழமொழி & ಎರಡொழுக்க பண்புகள்
பழமொழி (Proverb): Health is wealth – நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
இரண்டொழுக்க பண்புகள் (Two Good Habits):
- கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன்.
- கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.
📌 பொன்மொழி / Thought for the Day
தமிழ் பொன்மொழி: கடின உழைப்பும் தொடர்ந்த போராட்டமும் வெற்றியின் இரு சிறகுகள்.
Thought for the Day: "Hard work and continuous struggle are the two wings of success."
📌 பொது அறிவு & ஆங்கிலச் சொற்கள்
பொது அறிவு (General Knowledge):
- இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் யார்?
உடை: டி. உதயகுமார். - நாணயங்கள் பற்றி படிக்கும் படிப்பு எது?
விடை: நாணயவியல் (Numismatics).
English Words (ஆங்கிலச் சொற்கள்):
- Keen: Sharpened or eager (கூர்மையான / ஆர்வமுள்ள).
- Bold: Brave and confident (துணிச்சலான).
📌 புவியியலும் சுற்றுசூழலும்
இந்தியாவின் அமைவிடம்:
இந்தியா வட அரைக்கோளம் மற்றும் கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
- வடக்கில்: இமயமலை
- தெற்கில்: இந்தியப் பெருங்கடல்
- மேற்கில்: அரபிக்கடல்
- கிழக்கில்: வங்காள விரிகுடா
📌 NMMS - MAT (Science)
வினா: காற்றில் மெக்னீசியம் நாடா எரிக்கப்படும்போது உருவாகும் சேர்மம் எது?
- (1) மெக்னீசியம் கார்பனேட்
- (2) மெக்னீசியம் குளோரைடு
- (3) மெக்னீசியம் ஆக்ஸைடு
- (4) மெக்னீசியம் சல்ஃபேட்
விடை: (3) மெக்னீசியம் ஆக்ஸைடு
🗓️ முக்கிய நாட்கள் (July 28)
1. உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day)
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
2. உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day)
கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) அனுசரிக்கப்படுகிறது.
📖 நீதிக்கதை: தாமதமாக விழித்த அரவிந்த்
அரவிந்த் என்ற மாணவனுக்கு இரவு நேரம் வரை மொபைல் பார்த்தும் விளையாடியும் விழித்திருக்கும் பழக்கம் இருந்தது. தினமும் நள்ளிரவுக்குப் பிறகே தூங்குவான். அதனால் காலையில் சரியான நேரத்தில் எழ முடியாமல் பள்ளிக்குச் செல்ல அவசரப்படுவான்.
ஒருநாள் பள்ளியில் முக்கியமான அறிவியல் செய்முறைப் போட்டி நடந்தது. ஆனால் அரவிந்த் தாமதமாக எழுந்ததால் போட்டிக்கு தாமதமாகச் சென்று கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தான்.
அதைப் பார்த்த ஆசிரியர், "இரவில் சரியான நேரத்தில் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுபவர்கள்தான் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்து தங்கள் இலக்கை எளிதில் அடைவார்கள்" என்று அறிவுரை கூறினார்.
அன்றிலிருந்து அரவிந்த் தினமும் இரவு சீக்கிரம் தூங்கி, காலையில் நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். படிப்பிலும் முன்னேறி வெற்றி பெறத் தொடங்கினான்.
நீதி: இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல், சீக்கிரம் தூங்கி, காலையில் நேரத்தில் எழுவது ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும் அடிப்படை.
📰 இன்றைய செய்திகள் (28.07.2026)
- தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை (TNEA) தொடர்பு கொள்ளலாம்.
- ரூ.100 கோடிக்கு கூடுதலான வருவாய் ஈட்டும் தனிநபர் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய அரசுத் தகவல்.
- விண்வெளி குப்பைகளை கண்காணிப்பது அவசியமாகிறது என்பதால் விண்வெளி கழிவுகளை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை சீனா ஏவியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்:
- காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.
- ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: மகளிர் பிரிவில் ஈஷா சிங் தங்கப்பதக்கத்தையும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
📰 Today's Headlines (English)
- Engineering Admissions: Directorate of Technical Education, Tamil Nadu, announced that students can contact TNEA Facilitation Centres for engineering counselling and seat allotment support.
- Economy: The Central Government reported that the number of individuals earning over ₹100 crore has quadrupled in the last five years.
- Space & Tech: China has launched a new satellite dedicated to tracking and monitoring space debris.
Sports Updates:
- Commonwealth Games: Indian woman weightlifter secured a silver medal.
- ISSF World Cup Shooting: Esha Singh won the Gold medal and Manu Bhaker bagged the Bronze medal in the women's events.

No comments:
Post a Comment