சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - எளிதாக மதிப்பெண்கள் எடுக்க முக்கிய குறிப்புகள்! Special Teacher Eligibility Test – Key tips to score marks easily!
*TET முக்கிய குறிப்புகள்:*
மொழி பாடங்களில் வெறும் 20 பக்கங்களில்.. 15 முதல் 20 மதிப்பெண்கள் பெற முடியும்
எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள அலகுகளில் ஒவ்வொரு அலகிலும் இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் மட்டுமே இலக்கணம்
அப்படியெனில் மொத்தம் அதிகபட்சமாக 21 பக்கங்கள் இருக்கலாம்
இந்த 21 பக்கங்களை முழுவதுமாக முடித்தால் 15 முதல் 20 மதிப்பெண்கள் வரை உறுதியாக பெற முடியும்
அதேபோல ஆங்கிலத்திலும் ..
எட்டாம் வகுப்பு ஆங்கிலம்
இதில் கூடுதலாக ஒவ்வொரு யூனிட்டிலும் உள்ள மூன்று பக்கங்களும் படித்தபின் கூடுதலாக Grammar மட்டும்
இப்படித்தான் எளிதாக..15... 20 மதிப்பெண்கள் எடுக்கலாம்.
*TET தேர்வு சிறப்பாக எழுதுவதற்கான வழிமுறைகள்.*
பதட்டமில்லாமல், தன்னம்பிக்கையுடன்தேர்வு அறைக்கு செல்லுங்கள்.
தேர்வு நடைபெறும் இடத்திற்கு காலை 8 மணி முதல் 8:30 மணிக்குள் சென்று விட்டால் பதட்டமில்லாமல் இருக்கலாம். மொத்தம் மூன்று மணி நேரம்
*முதல் தாள்*
சைக்காலஜி 35 நிமிடங்கள்
தமிழ் 30 நிமிடங்கள்
English 30 நிமிடங்கள்
கணக்கு 45 நிமிடங்கள்
அறிவியல் 30 நிமிடங்கள்
மீதம் 10 நிமிடங்கள்
*இரண்டாம் தாள்*
சைக்காலஜி 35 நிமிடங்கள்
தமிழ் 35 நிமிடங்கள்
English 35 நிமிடங்கள்
கணக்கு&அறிவியல் 1 மணி 15 நிமிடங்கள்
*இரண்டாம் தாள்*
சைக்காலஜி 35 நிமிடங்கள்
தமிழ் 35 நிமிடங்கள்
English 35 நிமிடங்கள்
சமூக அறிவியல் 1 மணி 15 நிமிடங்கள்
தேர்வில் வெற்றி பெற
மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! ❄️ Hall Ticket இரண்டு மூன்று copies டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும். ( Mobile phone ல் காட்டினால் அனுமதிக்க மாட்டார்கள். Mobile phone is not at all allowed in the exam hall.)
❄️ ஆதார் அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது PAN card ஒரிஜினல் இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
❄️ இரண்டு கருப்பு மை பந்து முனை பேனாக்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். (Tranferent)
❄️ தேர்வு நேரத்தில் மொபைல் ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் அனுமதி இல்லை.
❄️ தேர்வு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மையத்தை சென்றடைந்து விடவும். ( 9.30 am .. க்கு gates .. close செய்து விடுவார்கள்)
❄️ முதலில் நன்கு விடை தெரிந்த வினாக்களுக்கு விடையளித்து விடவும். ( விடை தெரியாத அல்லது குழப்பமான வினாக்களுடன் போராடி விடையளிக்க முயற்சித்துக் கொண்டிருந்தால்.. நேரம் விரயம் ஆகி.. பிறகு தேர்வு முடியும் நேரத்தில் விடை தெரிந்திருந்தும் கூட பல வினாக்களுக்கு விடையளிக்காமலேயே வெளியேறும் சூழல் உருவாகும். எனவே முதலில் நன்கு விடை தெரிந்த வினாக்களுக்கு விடையளித்து விடலாம்)
❄️ *தேர்வு நேரம்.. உடல் நலம் மற்றும் மனநலம் மிக முக்கியம்.*
🔴 போதுமான அளவு படிக்கவில்லையே என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ தேர்வில் கலந்துகொள்ளாமலிருந்து விடவேண்டாம்.
விண்ணப்பித்தவர்கள் எப்படியாவது தேர்வில் கட்டாயமாக கலந்துகொள்ள முயற்சிப்போம். சில நேரங்களில் தேர்வு எளிமையாக இருந்து சுலபமாக தேர்ச்சி பெறும் வாய்ப்புகளும் இருக்கின்றன. அவற்றை தவறவிட வேண்டாம்.
ஆசிரிய உறவுகளுக்கு இனிய வணக்கம்...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நடைபெற இருக்கின்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
மன அழுத்தம் இன்றி
மனப்பதட்டத்தை தவிர்த்து
தேர்வினை எதிர்கொள்ளுங்கள்...
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
பழைய மாதிரி வினாத்தாள்களை பார்த்தோ....
தற்போது இணையதளங்களில் பகிரப்படும் வினாத்தாள்களை பார்த்தோ....
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
கவலையோ மன குழப்பமோ அடைய வேண்டாம்....
இது பணி புரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு......
வினாத்தாள்கள் அனைத்தும் மிக எளிமையானதாகவே இருக்கும்..... தாள் 1
3 4 5
தாள் 2
6 7 8
வகுப்புகளுக்கான புத்தகங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும்.....
ஒருவேளை இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால்..... பிறர் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ என்ற எண்ணத்தை கை விடுங்கள்....
உங்களது தகுதியும் திறமையும் இத்தனை ஆண்டு காலம் நீங்கள் பணி செய்து உருவாக்கிய மாணவர்களுக்கு தெரியும்....
பிற துறையினருக்கு தகுதி தேர்வு நடத்தினால் ஒரு நபரும் தேர்ச்சி அடைய மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை...
நம்முடைய வயது
குடும்ப சூழ்நிலை
நமது நினைவாற்றல்
ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப மாறுபடும்....
2028 ஆகஸ்டு வரை இன்னும் ஐந்து தேர்வுகள் இருக்கிறது....
உங்களை நம்பி உங்கள் குடும்பமும் உங்கள் குழந்தைகளும் இருக்கிறார்கள்.... என்பதை நினைவில் கொண்டு மன அழுத்தத்திற்கு உட்படாதீர்கள்...
இந்தத் தேர்விலேயே அனைவரும் தேர்ச்சி பெற்று விடுவீர்கள்.....
மனப்பதட்டமின்றி மனக்கவலை இன்றி தேர்வு எதிர்கொள்ளுங்கள்....
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர் உயர்ந்தவரும் திறமையானவரும் அல்ல
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர் தாழ்ந்தவரும் திறமையற்ற வரும் அல்ல...
20 வருடத்திற்கு மேல் பணி செய்யக்கூடிய ஆசிரியருக்கு ஒரு தகுதி தேர்வை நிர்ணயம் செய்த நிகழ்வுதான் வேதனைக்குரியது....
நம் பணி அனுபவத்தில் எத்தனையோ இன்னல்களை கடந்து வந்திருக்கிறோம் இவையும் நமக்கு ஒரு சவாலே....
மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்.....
கட்டாயம் அனைவரும் தேர்ச்சி பெறுவீர்கள் வினாத்தாள்கள் எளிமையானதாகவே அமையும்....
தகுதித் தேர்வின் வெற்றியும் தோல்வியும் ஒரு ஆசிரியர் உடைய தகுதியை நிர்ணயிப்பது இல்லை....
அனைவரும் தேர்ச்சி பெற வாழ்த்துகள்..
No comments:
Post a Comment