Breaking

Tuesday, June 30, 2026

தொடக்கக் கல்வித் துறை பணி நிரவலில் உண்டான சந்தேகம்

தொடக்கக் கல்வித் துறை பணி நிரவலில் உண்டான சந்தேகம் - Doubt regarding the staff redeployment process in the Elementary Education Department.

ஒரு பள்ளியில் யார் இளையவராக பணியில் சேர்ந்து உள்ளாரோ அவரே பணி நிரவலுக்கு உட்படுவார்.

அவர் எந்த வருடம் நியமனம் என்றாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

(ONLY STATION SENIORITY)

_ஒரு சில பிரிவினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது._

_பணி நிரவலில் விலக்களிக்கப் பட்டவர்கள்_

1)40% க்கு மேல் கண் பார்வையற்றோர்

2)இந்தாண்டு ஓய்வு பெற இருப்பவர் அல்லது விருப்ப ஓய்வு பெறுபவர்.(VRS)

3)NCC பயிற்சியாளர்

4) கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் பணி நிரவலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

_3-YEAR NORMS_


5) 40% அதற்கு மேலும் மாற்றுத்திறனாளிகள்

அதன்பின்பு ஒன்றிய அளவிலோ அல்லது மாவட்ட அளவில் பணிநிரவலின் போது முதன்முதலாக தற்போதைய பணியில் (Appointment seniority) சேர்ந்தவர்கள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

(தற்போதைய செய்தி)

(பணி நிரவல் விதிவிலக்கில் அரசாணை -12 நாள் :20.02.2022 படி மாற்றுத்திறனாளிகள் விடுபட்டு இருந்தனர், தற்போது அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.)

_SSTA-மாநில தலைமை_

No comments:

Post a Comment