Breaking

Monday, June 22, 2026

மேல்நிலை துணை தேர்வுகள்: தனித் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

மேல்நிலை துணை தேர்வுகள்: தனித் தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியீடு Higher Secondary Supplementary Exams: Hall tickets released for private candidates.

மேல்நிலை துணைத் தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்படும் என, அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு (11 மற்றும் 12-ம் வகுப்பு) துணைத் தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளன.

தேர்வெழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இன்று (23-ம் தேதி) பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நாட்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாமல் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

செய்முறைத் தேர்வு தேதி குறித்த விவரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

+2 துணைத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 23.06.2026 முதல் பதிவிறக்கம் செய்யலாம்! Hall tickets for the Class 12 supplementary examination can be downloaded starting from 23.06.2026! +2 துணைத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 23.06.2026 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

மேல்நிலை இரண்டாம் ஆண்டு /மேல்நிலை முதலாமாண்டு (ARREAR)

துணைத் தேர்வு, ஜூன்/ஜூலை 2026

தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம்

பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான

செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2026, மேல்நிலை இரண்டாமாண்டு / மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தக்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 23.06.2026 (செவ்வாய்க் கிழமை) அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET" என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் 2नांना "HSE SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2026 HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரியத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்தபின் தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நாட்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075/9498383076 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். ஒம்/

அரசுத் தேர்வுகள் இயக்குநர்

: 22.06.2026.

இடம்: சென்னை - 600 006.


This press release from the Directorate of Government Examinations, Chennai, announces that hall tickets for the June/July 2026 Higher Secondary supplementary examinations are available for download starting June 23, 2026.

Private candidates can download their tickets from www.dge.tn.gov.in by clicking on "HSE Supplementary Exam June/July 2026 - Hall Ticket Download" and entering their application number and date of birth.

Candidates must confirm their exam dates and subjects on the ticket and are advised to contact the chief supervisor at their assigned center for specific practical exam details.

For questions regarding downloading the hall ticket, candidates can contact 9498383075 or 9498383076.

No comments:

Post a Comment