Breaking

Thursday, June 18, 2026

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2026 - 2027 தகவல்



ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2026 - 2027 தகவல் Information regarding General Transfer Counseling for Teachers (2026–2027)

2026-2027 ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அளிக்க உள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட 8 இலக்க Emis Id மூலம் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டிய தேதி 15-06-2026 முதல் 22-06-2026 முடிய என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!

ஒருவர் ஒன்றியத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய மூன்றுக்கும் ஒரு முறையில் மூன்று கட்டத்திலும் டிக் கொடுத்து பதிவு செய்தால் போதும்.

ஒவ்வொரு கலந்தாய்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டியது இல்லை.

Beo Approve செய்தவுடன் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 3 காப்பிகள் பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று Beo அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்பதை அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்! 2026-27ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொதுமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு (General Transfer Counselling) ஜூன் 15, 2026 முதல் தொடங்குகிறது.

இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணையைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு குறித்த முக்கிய விவரங்கள் மற்றும் தேதிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

🗓️ முக்கியத் தேதிகள் (Counselling Schedule)

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜூன் 15, 2026

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 22, 2026

முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (Priority List): ஜூன் 25, 2026 முதல் ஜூன் 27, 2026 வரை

ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (Deployment): ஜூன் 29, 2026

தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு: ஜூலை 15, 2026

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (Transfer Counselling): ஜூலை 22, 2026 முதல் ஜூலை 30, 2026 வரை நடைபெறும். 💻 விண்ணப்பிக்கும் முறை

தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அனைவரும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) இணையதளம் வழியாக தங்களின் தனிநபர் உள்நுழைவு (Individual Login) பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (CEO) ஆகியோரின் ஒப்புதலோடு மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்படும். 📝 முக்கிய நிபந்தனைகள் & தளர்வுகள்

ஓராண்டு விதிவிலக்கு: வழக்கமாகப் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கத் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு காலம் பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளியில் ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை புதிய தளர்வை அளித்துள்ளது.

முன்னுரிமைப் பிரிவினர் (Priority Category): மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பெற்றவர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்களின் துணைகள், விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களுக்கு வழக்கம் போல முன்னுரிமை வழங்கப்படும்.

🏫 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள்பள்ளிக்கல்வித்துறை மட்டுமன்றி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வும் ஜூன் 16, 17 மற்றும் 18, 2026 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் நடத்தப்படவுள்ளது

No comments:

Post a Comment