Breaking

Tuesday, April 21, 2026

தேர்தல் பணிமுடிந்த மறுநாள் 24.4.2026 சிறப்பு விடுப்பு அனுமதித்து உதவ வேண்டுதல் சார்பு

தேர்தல் பணிமுடிந்த மறுநாள் 24.4.2026 சிறப்பு விடுப்பு அனுமதித்து உதவ வேண்டுதல் சார்பு Subject: Request for Granting Special Leave on 24.04.2026 — The Day Following the Completion of Election Duty

பெறுதல்-

மதிப்புமிகு ஆணையர் அவர்கள்,

தமிழ்நாடு தேர்தல் ஆணையரகம்,

சென்னை

மதிப்பிற்குரிய அம்மா.

பொருள்: தமிழ்நாடு பொதுத் தேர்தல் 2026 - ஆசிரியர்கள். தேர்தல் பணிமுடிந்த மறுநாள் 24.4.2026 அன்று பள்ளி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 24.4.2026 சிறப்பு விடுப்பு அனுமதித்து உதவ வேண்டுதல் சார்பு.

வணக்கம்.!

2026 ஆம் ஆண்டின் தமிழக பொது தேர்தல் 23.4.26 அன்று நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் ஆசிரியப் பெருமக்கள் பெரும் பங்கேற்று சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தேர்தல் நாளுக்கு முதல்நாள் அதாவது 224 2026அன்று பணி ஆணையேற்று தேர்தல் பணிக்கு வரும் ஆசிரியர்கள். தேர்தல் பணிமுடிந்து வாக்கு செலுத்தப்பட்ட பெட்டிகள் அனைத்தும் மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கிட்டத்தட்ட அன்று நடு இரவு அல்லது 24.4.26 அதி காலை ஆகிவிடும். அதற்கு பின்பு காலையில் தான் வீடு திரும்பும் நிலை ஏற்படுகிறது.

ஆனால் பள்ளிக் கல்வித் துறையில் 24.4 2026 பள்ளி வேலை நாளாக உள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் பெருமக்களுக்கு அந்நாளில் சிறப்பு விடுப்பு வழங்க உரிய துறைக்கு ஆணைகள் வழங்கி உதவிடுமாறு தங்களை இதன் மூலம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.



This is a formal request letter addressed to the Tamil Nadu Election Commissioner regarding the 2026 Tamil Nadu General Election.

It requests a special holiday for teachers on April 24, 2026, the day after election duty, as they will be working late into the night returning election materials.

Requesting Authority: Tamil Nadu Election Commissioner.

Purpose: To grant a special holiday on April 24, 2026, for teachers involved in election duty.

Reason: Election duties will conclude late at night on April 23 or early morning on April 24, making it difficult for teachers to report to school the same day.

No comments:

Post a Comment