Breaking

Friday, February 27, 2026

TRB ADDENDUM 03B/2025 for PwD Qualifying Marks - Teacher Eligibility Test - 2025



TRB ADDENDUM 03B/2025 for PwD Qualifying Marks - Teacher Eligibility Test - 2025

அறிவிக்கை எண்: 03B/2025

26.02.2026

ADDENDUM

ஆசிரியர் வாரிய தேர்வு அறிவிக்கை

நாள்: 11.08.2025-இன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-I 15.11.2025 அன்றும், தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றன. அரசாணை (நிலை) எண். 23, பள்ளிக்கல்வித்துறை, நாள். 28.01.2026ன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் கீழ்கண்டவாறு அரசால் மாற்றி அமைக்கப்பட்டது.

Minimum Marks (%) to be obtained in TNTET

Paper-I

60% or 90 Marks

50% or 75 Marks

40% or 60 Marks

Paper-II

60% or 90 Marks

50% or 75 Marks

40% or 60 Marks இவ்வரசாணையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025-இன்படி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்பட்டதால் 11.08.2025 நாளிட்ட அறிவிக்கைக்கு பிற்சேர்க்கை அறிவிக்கை எண் (Addendum) 03A/2025 நாள்.29.01.2026இல் இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், அரசாணை (நிலை) எண். 46. பள்ளிக்கல்வித்துறை, நாள். 25.022026இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% ஆக நிர்ணயித்து அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வரசாணையினை ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025-இன்படி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 29.01.2026 நாளிட்ட பிற்சேர்க்கை அறிவிக்கை எண் (Addendum) 03A/2025இல் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-IIக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் மேற்காண் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பின்பற்றப்பட்டு தகுதித்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும்.

This addendum from the Teachers Recruitment Board announces updated minimum passing marks for the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET), effective from February 26, 2026.

The minimum qualifying mark for candidates with disabilities (PWD) has been revised to 40% (60 marks out of 150) for both Paper-I and Paper-II.

This change is based on Government Order No. 46, dated February 25, 2026.

Results for the exams held on November 15-16, 2025, will be updated to reflect this 40% requirement for PWD candidates.

CLICK HERE TO DOWNLOAD TRB ADDENDUM 03B/2025 for PwD Qualifying Marks - Teacher Eligibility Test - 2025 PDF

No comments:

Post a Comment