Breaking

Friday, January 2, 2026

30% ஓய்வூதியமா? - பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது - CPS ஒழிப்பு இயக்கம்



30% ஓய்வூதியமா? - பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது - CPS ஒழிப்பு இயக்கம் 30% pension? - The struggle will not end until the old pension scheme is implemented - CPS abolition movement

ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக திரு.ககன்தீப்சிங் பேடி இ.ஆ.ப தலைமையில் அமைக்கப்பட்ட அலுவலர் குழுவில்

*தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம்* அளித்த பரிந்துரையில் தான் அரசு ஊழியர், ஆசிரியர் நலனுக்கு எதிரான *தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டத்தை (TSPS )* முன்மொழிந்தனர். *என்ன முன்மொழிவுகள்.?*

1) 60 வயதில் ஓய்வு பெறும் போது 35%

65 வயதில் 40%

70 வயதில் 45 %

75 வயதில் 50% ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.

2) அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்யும் பங்கீடு 10%

அரசின் பங்கீடு 10%லிருந்து 20% ஆக உயர்த்த வேண்டும்.

3) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் போன்று பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 /- லட்சமாக்க வேண்டும்.

4) ஓய்வு பெறும் போது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியகளின் 10% பங்கீட்டை வட்டியுடன் கொடுக்க வேண்டும்.

அரசின் பங்கீட்டை அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அரசே வைத்துக் கொள்ளலாம்.

5) 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு

குறைந்தபட்சம் ரூ.10000 /- ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

6) பிடித்தம் செய்யப்படும் பங்கீட்டு தொகை 10% +20% நிதியை பராமரிக்க தமிழ்நாடு ஓய்வூதிய நிதி மேலாண்மை வாரியத்தை ( Tamilnadu Pension Management Authority) கருவூல ஆணையர் தலைமையில் அமைக்கலாம். இந்த நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட, கார் வாங்க வட்டிக்கு கடன் கொடுக்கலாம்.

_____

*TSPS திட்டம் சாத்தியமா.?*

NPS (புதிய ஓய்வூதியம் திட்டம் ) திட்டத்திற்கும்

UPS ( ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ) திட்டத்திற்கும் இடைப்பட்ட திட்டம் TSPS.

CPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.

தமிழக அரசு பங்கீடு 10%.

NPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.

பிற மாநிலங்களில் அரசின் பங்கீடு 14%.

UPS அரசு ஊழியர் பங்கீடு 10%.

மத்திய அரசின் பங்கீடு

18.5%.

*TSPS திட்டத்திற்கான பரிந்துரை:*

அரசு ஊழியர் பங்கீடு 10%

*தமிழக அரசின் பங்கீடு 20%*.

தற்போது CPS திட்டத்தில் தமிழக அரசு 10% பங்கீட்டுத் தொகையாக மாதம் 626 கோடி செலவு செய்து வருகிறது.

TSPS திட்டபடி அரசு பங்கீடு 20% ஆக உயர்த்தப்பட்டால், தமிழக அரசு மாதம் ரூ.1252 கோடி செலவு செய்ய வேண்டும்.

*TSPS திட்டப்படி*

*தமிழக அரசு மாதம் 20% பங்கீடும் செலுத்தி., 60 வயதில் 35% ஓய்வூதியமும்,*

*5 வருடத்திற்கு ஒரு முறை ஓய்வூதியத்தை 5% உயர்த்துவது என்ற TSPS திட்டமானது...*

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதை விட தமிழக அரசுக்கு பன்மடங்கு செலவு கூடுதலாகும். பங்களிப்பு சேமநல நிதி ( Contributiory Provided Fund ) திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியதற்கான வரலாறும், பொருளாதாரக் கணக்கும் தெரியாத தலைவர்களின் முன்மொழிவே தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம்.

*பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட பன்மடங்கு கூடுதல் செலவாகும் என்பதால் தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே இல்லை.*

😥😥😥😥😥😥😥😥😥

மத்திய அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000/-

எனவே, OPS திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.9000/-

தமிழ்நாடு அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700/-

எனவே, தமிழக அரசில் OPS திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.7850/-

10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அச்சங்கம் முன்மொழிவு அளித்துள்ளது.

*குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் தகுதியான ஓய்வூதியத்திற்கு அகவிலைப் படி வழங்க வேண்டும் என்று TSPS திட்டத்தில் வலியுறுத்தவில்லை.*

😥😥😥😥😥😥😥😥😥

பணிக்கொடை அதிகபட்சம் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று அச்சங்கம் முன்மொழிந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக (01.01.2024முதல்) தமிழ்நாட்டில் அதிகபட்ச பணி கொடை ரூ.25 லட்சம்.

ரூ.25 லட்சத்திற்குப் பதில் ரூ.20 லட்சம் என்று குறைவாக கேட்பது யாருடைய நலனுக்காக.?

*ஓய்வூதியச் சட்டம் வேறு.* *பணிக்கொடை சட்டம் வேறு.*

தொழிலாளர் நலச் சட்டப்படி

பணிக் கொடை பெறுவது

அரசு ஊழியர்,

ஆசிரியர்,

தொழிலாளர்களின் உரிமை.

பணிக்கொடை வழங்குவது

வேலை வாங்கும்

முதலாளிகள் மற்றும்

அரசுகளின் கடமை.

ஓய்வூதியம் 50% க்கு பதில் 35% வழங்க வேண்டும் என்று கேட்பதற்கு...

*பேரம் பேசுவதற்கு ஓய்வூதியம் சந்தைப் பொருள் அல்ல.*

*ஓய்வூதியம் என்பது பிச்சை பணம் அல்ல.*

*ஓய்வூதியம் என்பது கருணை தொகையும் இல்லை*.

*ஓய்வூதியம் நமது உரிமை*.

*ஓய்வூதியம் சொத்துரிமை போன்றது என்றும்*.,

*ஓய்வூதியம் என்பது*

*கொடுபடா ஊதியம் என்றும்*..

*உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது*.

*ஓய்வூதியம் தொடர்பாக பேரம் பேச யார் இவர்களுக்கு உரிமை வழங்கினார்கள்.?*

*பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே.!*

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக

CPS

NPS

UPS

GPS

TSPS

போன்ற எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முடியாது.

பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அரசுக்கு பாதுகாப்பானது

செலவும் குறைவு.

*பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது.*

- CPS ஒழிப்பு இயக்கம்

1 comment:

  1. இவர்கள் ஆட்சியில் MLA MP தான் பழைய ஓய்வூதிய திட்டம் மற்ற அனைவருக்கும் அல்வா தான்....

    ReplyDelete