Tamilnadu Government Collegiate Teachers' Association (TNGCTA) to the Joint Action Council of Tamil Nadu Teachers' Organisations and Government Employees' Organisations (JACTO-GEO) expresses conditional acceptance of the new pension scheme but strong opposition to the government retaining the 10% Contributory Pension Scheme (CPS) contributions already deducted from employees' salaries.
The TNGCTA requests JACTO-GEO to take immediate action to have the deducted CPS amount, with interest, returned to employees upon retirement, threatening strong protests if the demand is not met.
TNGCTA conditionally welcomes the new pension scheme announced on January 3, 2026.
It strongly opposes the government retaining the 10% CPS contributions already collected, which for college professors can range from 75 lakhs to 1 crore rupees.
The association urges JACTO-GEO to immediately act to ensure these funds are returned with interest to employees upon retirement.
Failure to meet this demand will result in immediate and strong protest actions.
Tamil Nadu Government College Teachers' Association statement regarding the TAPS pension scheme - 05-01-2026
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்
TAMILNADU GOVERNMENT COLLEGIATE TEACHERS' ASSOCIATION (Recognized by the Govt. of Tamilnadu G.O.No.341. Dt.22.03.1980) பேரா. நாசிங்கம் நிலையம். 2. சைடோஜி தெருதிருவல்லிக்கேணி, சென்னை+
Phone: 044-26414354, E-mail: tngcta1971@gmail.com, Website: Ingcta.org
: 05-01-2026
பெறுநர்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சென்னை
தோழமை வணக்கம்.
தற்போது தமிழக அரசால் 01-01-2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நிலையில் வரவேற்க தகுந்ததாக இருந்தா ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட 10% CPS தொகை மிக அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட 10% CPS தொகையானது ரூபாய் 25 லட்சம் முதல் ரூபாய் 1 கோடி வரை அரசின் இருப்பில் உள்ளது. எனவே ஊழியர்கள் செலுத்திய இவ்வளவு பெரிய தொகையை ஊழியர்களுக்கு தராமல் தமிழக அரசு வைத்துக் கொள்வதை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் ஏற்க மறுக்கிறது. கடந்த 21 ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் முதல் காலவரைய வேயை நிறுத்தம் போராட்டம் வரை அரசு கல்லூரி ஆசிரியர்கள் முழுமையாக போராட்டக் குணத்துடன் பங்கேற்று மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே எனவே ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இதனை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிடிக்கப்பட்ட 10% CPS தொகையினை வட்டியுடன் ஊழியர்க பணி ஓய்வு பெறும்போது வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இதற்காக அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியகழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
இப்படிக்கு
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்

No comments:
Post a Comment