TNEB (TNPDCL) தரவு ஆய்வாளர் வேலை, சம்பளம் ₹10 லட்சம்.
நிறுவனம்: தமிழ்நாடு மின்சாரப் பகிர்மானக் கழகம் லிமிடெட் (TNPDCL).
பதவியின் பெயர்: தரவு ஆய்வாளர் (Data Analyst) - ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis).
காலியிடங்கள்: 2.
வேலை நடக்குமிடம் (Location): சென்னை (தேவைப்பட்டால் களப்பணிகளுக்குச் செல்ல நேரிடும்).
ஒப்பந்த காலம்: 1 வருடம் (செயல்திறன் மற்றும் தேவையின் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்).
கல்வித்தகுதி:
இளங்கலை பட்டம் (Bachelor’s Degree): பொறியியல், பொருளாதாரம், புள்ளியியல், கணினி அறிவியல் அல்லது தொடர்புடைய துறை.
முதுகலை தகுதி (Post Graduate): டேட்டா அனலிட்டிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ், பொதுக் கொள்கை அல்லது மேலாண்மை ஆகியவற்றில் தகுதி. முன் அனுபவம் (4 முதல் 6 ஆண்டுகள்):
டேட்டா அனலிட்டிக்ஸ், செயல்முறை மேம்பாடு அல்லது நிதிசார்ந்த பகுப்பாய்வு.
மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் அல்லது பெரிய அளவிலான தரவு சார்ந்த திட்டங்களில் முன் அனுபவம் (விரும்பத்தக்கது).
செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது மெஷின் லேர்னிங் (ML) கருவிகளைப் (Python, R, TensorFlow, Scikit-learn) பயன்படுத்துவதில் அனுபவம்.
தொழில்நுட்பத் திறன்கள்:
தரவு பகுப்பாய்வு கருவிகளான Power BI, Tableau, SQL, Excel ஆகியவற்றில் தேர்ச்சி.
ETL செயல்முறைகள் மற்றும் தரவுத்தள மேலாண்மையில் அறிவு.
வயது வரம்பு (01.07.2025 தேதியின்படி): அதிகபட்சம் 35 வயதுக்குள்.
மொழித்திறன்: தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் (தொகுப்பூதியம்): ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpdcl.org என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்


No comments:
Post a Comment