Breaking

Saturday, December 27, 2025

சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார இயக்கம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு



சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார இயக்கம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு Chennai Corporation Urban Health Mission various job vacancy announcements.

சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார இயக்கம் (Chennai City Urban Health Mission) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியின் தன்மை: சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Health & Wellness Centers) பணியாற்ற தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிட விவரங்கள்:

1. மருத்துவ அதிகாரி (Medical Officer)

காலியிடங்கள்: 14

மாத தொகுப்பூதியம்: ரூ. 60,000/-

கல்வித்தகுதி: MBBS பட்டம், NMC அங்கீகாரம், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல்.

2. செவிலியர் (Staff Nurse)

காலியிடங்கள்: 10

மாத தொகுப்பூதியம்: ரூ. 18,000/-

கல்வித்தகுதி: DGNM அல்லது B.Sc. Nursing, இந்திய செவிலியர் கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.

வயது வரம்பு: 50 வயதுக்கு மிகாமல்.

3. பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் - தரம் II (ஆண்) (MPHW / Health Inspector Grade-II - Male)

காலியிடங்கள்: 20

மாத தொகுப்பூதியம்: ரூ. 14,000/-

கல்வித்தகுதி: பிளஸ் 2-வில் உயிரியல்/தாவரவியல் மற்றும் விலங்கியல், பத்தாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடம், 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல்.

4. ஆதரவு பணியாளர் (Support Staff)

காலியிடங்கள்: 40

மாத தொகுப்பூதியம்: ரூ. 8,500/-

கல்வித்தகுதி: குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி, நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல். விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவம்: www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமர்ப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.

கடைசி தேதி மற்றும் நேரம்: 09.01.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர், சென்னை மாநகர நகர்ப்புற சுகாதார இயக்கம், பொது சுகாதாரத் துறை, ரிப்பன் மாளிகை (Ripon Buildings), சென்னை – 600 003.

தொடர்புக்கு:

044 – 2561 9330

044 – 2561 9209

முக்கிய குறிப்பு: இந்த வேலைவாய்ப்பானது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது.

No comments:

Post a Comment