திறன் பயிற்சியில் 11,302 மாணவர்கள் 'ஆப்சென்ட்' கண்காணிப்பு இல்லாமல் எதிர்காலம் கேள்விக்குறி 11,302 students were absent from skill training; their future is uncertain without proper monitoring.
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மாணவ மாணவியரின் திறனை மேம்படுத்த, அரசு நடத்தும் 'திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஆர்வம் காட்டாமல், திரு வன்ளூர் மாவட்டத்தில் மட்டும், 11,302 மாணவ-மாணவியர், 'ஆப்சென்ட் ஆகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கூடுதல் பணிச்சுமை என, ஆசிரியர்களும் சரியாக கண்காணிக்காததால், மாணவர்களின் எதிர்கா லம் கேள்விக்குறியாகி உள்ளது.
அரசு பள்ளியில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில், பள்ளி நேரங்களில், 'திறன்' என்ற கற்றல் இடைவெளியை குறைக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, பள்ளிகல்வித் துறை அமைச்சர் மகேஷ், கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் அறிவித்தார். இதற்காக, 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஜூலை முதல், மாநிலம் முழுதும் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 462 பள்ளிகளில், 69ம் வகுப்பு வரை, 24,747 மாணவ -மாணவியர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வாகினர். இவர்களில், 11,302 மாணவ மாணவியர் பயிற்சிக்கு வராமல் உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகள் அரசுக்கு அனுப்பிய கடிதம் வாயிலாக இந்த விபரம் தெரிய வந்துள்ளது. சிறப்பு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை; நாங்கள் என்ன செய்ய முடியும்' என, பள்ளி கல்வித் துறையின் மாவட்ட அதிகாரிகள்கூறுகின்றனர்.
ஆனால், வழக்கமாக பாடம் நடத்தும் ஆசிரியர் களே, சிறப்பு பயிற்சியையும் அளிக்க வேண்டியுள்ளது. தேவையில்லாத பணிச்சமை எனக்கூறி, ஆசிரியர்களும் கவனம் செலுத்தாதே மாணவர்கள் வருகை குறைய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
கண்காணிக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சரியாக கண்காணிக்காததால், LESST பள்ளி மாணவவியரின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் திறன் பயிற்சிக்கு தேர்வான அனைத்து மாணவர்களையும் பயிற்சி பெற வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லாந்தால், பள் ளிக் கல்வி துறையில் மாணவ மாணவியரின் கல்வி தரம் பாதிக்கபடுகிறது. தற்போது பள்ளி நேரத்திலேயே சிறப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. இது, சரியான நடை முறை அல்ல. திறன் பயிற்சி மாணவ - மாணவி யருக்கு, பள்ளி நேரங்களில் சக மாணவர்களோடு வழக்கம்போல் பாடம் நடத்த வேண்டும். மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment