Breaking

Friday, July 3, 2026

பணி நிரவல் கலந்தாய்வு தொடர்பான இடைக்கால தடை –ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்



பணி நிரவல் கலந்தாய்வு தொடர்பான இடைக்கால தடை –ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:- Interim stay on the staff redeployment counseling process – Key information for teachers:

நீதிமன்ற உத்தரவு இன்னும் நீதிமன்ற இணையதளத்தில் (Court Website) பதிவேற்றம் செய்யப்படாததால், பணி நிரவல் (Deployment) கலந்தாய்வுக்கு உண்மையில் தடை கிடைத்துள்ளதா இல்லையா? என்ற சந்தேகம் பல ஆசிரியர்களிடம் உள்ளது.

இதுகுறித்து தற்போதைய நிலை வருமாறு:

✅ பணி நிரவல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

✅ இருப்பினும், இந்தத் தடை நீண்ட காலத்திற்கு அல்ல. தற்போது ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. ✅ இந்த இடைக்கால தடை தொடக்கக் கல்வித்துறைக்கு (Elementary Education Department) மட்டுமே பொருந்தும். பள்ளிக்கல்வித்துறைக்கு (School Education Department) இது பொருந்தாது.

✅ காரணம், இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பவர்கள் தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே.

✅ மேலும், ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை (General Transfer Counselling) நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

இந்த அடிப்படை விஷயங்களை ஆசிரியர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று மாலைக்குள் அல்லது நாளை, பணி நிரவல் கலந்தாய்வுக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை தொடர்பான நீதிமன்ற உத்தரவு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அந்த உத்தரவு வெளியான பிறகே, மனுதாரர்கள் தாக்கல் செய்த கோரிக்கைகளில் (Prayer) எவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது, எவற்றில் என்ன கருத்து தெரிவித்தது என்பது முழுமையாகத் தெரியவரும். இந்த வழக்கில் மனுதாரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை:

*08.06.2026-ஆம் தேதி வெளியிடப்பட்ட* *Na.Ka.No.032782/C3/E1/2026 மற்றும்* *Na.Ka.No.009324/D1/2026 ஆகிய* *சுற்றறிக்கைகளை,* *தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை* *ஆசிரியர்களை* *(Secondary Grade* *Teachers) பணி நிரவல்* *செய்வது தொடர்பாக ரத்து செய்ய வேண்டும்.* *மேலும்,* *2022 மற்றும் 2023* *ஆண்டுகளுக்கான பதவி உயர்வு குழுப்* *பட்டியலை (Panel) சிறப்பு விதிகளின்படி* *தயாரித்து, முதலில்* *ஆண்டு வாரியாக பதவி உயர்வு கலந்தாய்வை* *நடத்தி,அதன்* *பின்னரே* *தேவையெனில் சட்டப்படி பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதே* *அவர்களின் முதன்மை கோரிக்கையாகும்.*

நீதியரசர் இந்தக் கோரிக்கைகளுக்கு என்ன பதில் அளித்துள்ளார் என்பது, விரைவில் வெளியாகும் முழுமையான நீதிமன்ற உத்தரவைப் பார்த்த பிறகே உறுதியாகத் தெரியவரும்

No comments:

Post a Comment