Breaking

Tuesday, June 30, 2026

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் TETOJAC சந்திப்பு | கோரிக்கைகள்



This document appears to be a checklist of 12 specific demands or action items written in Tamil, likely related to education or civil service policies in Tamil Nadu.

The list includes demands for administrative transfers, re-employment for teachers finishing in the 2026-2027 academic year, and salary adjustments based on court rulings.

The items are formatted with checkmarks and numbered icons, indicating a list of objectives to be completed or verified

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் TETOJAC சந்திப்பு | கோரிக்கைகள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு

டிட்டோஜாக்

மாநில அமைப்பு

நாள்:29.06.2026

****

மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு-பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முறையீடு! * டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று(29.06.2026) முற்பகல் சென்னையில் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேரில் சந்தித்து ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக எழுத்து மூலமான விண்ணப்பங்கள் அளித்து கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணக் கேட்டுக்கொண்டனர்.

* ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 02.07.2026 அன்று நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை, பதவி உயர்வு கலந்தாய்வு நடந்து முடிந்த பின்பு அதன் பிறகு உபரி பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, உபரி பணியிடங்கள் இருந்தால் ஒன்றியத்திற்குள் மட்டும் பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.

* 2026-2027ஆம் கல்வியாண்டில் பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதிவரை பணி நீட்டிப்பு (Re-employment) வழங்கப்பட வேண்டும். 30.06.2026 அன்று பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

. * 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை (Special TET) முன்னிட்டு, 03.07.2026 அன்று நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (SMC) கூட்டத் தேதியை தள்ளி வைக்க வேண்டும்.

* ஊதிய அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான நிலை 10ல், தளம்-45ஐ 50 வரை நீட்டித்து ஆணை வெளியிடப்பட வேண்டும்.

* ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு கால அட்டவணையில் 2 பட்டப்படிப்புகள் படித்துள்ளதை பல்கலைக்கழக மானியக்குழு(UGC) மற்றும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு,அது தொடர்பான தணிக்கைத் தடைகளை நீக்கிட வேண்டும்.

* தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் ரூ.5400, ரூ5700 ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகள் தொடர்பாகவும்,bஅது தொடர்பான ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும். * சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (Special TET)தேர்ச்சி மதிப்பெண்ணை மேற்குவங்க அரசு குறைத்துள்ளது போல், தமிழ்நாடு அரசும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அதில் ஆசிரியர்களின் பணி அனுபவம், உயர்கல்வித்தகுதி ஆகிவற்றுக்கு Weightage மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனைக்குத் தீர்வு

* அரசாணை எண்: 243, நாள்:21.12.2023 ரத்து

* 10.03.2020 வரை ஊக்க ஊதிய உயர்வு பெறுவது தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள்

* ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பாக 2022 முதல் வருடாந்திர தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள்

* ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற உச்ச நீதிமன்றம் 31.08.2028 வரை அவகாசம் அளித்துள்ளதால், நியமன முன்னுரிமைப்படி நிபந்தனையுடன் பதவி உயர்வு வழங்கிட வேண்டுதல்.

* மேற்கண்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று (29.07.2026) மாலை நேரில் சந்தித்துப் பேசுமாறு மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

* மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்களும் பங்கேற்றது சிறப்புக்குரியதாக அமைந்திருந்தது.

* இந்நிகழ்வுகளில் டிட்டோஜாக் சுழல் முறைத் தலைவர் திரு ச.மயில், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் திரு. ஈவேரா, திரு அ. வின்சென்ட் பால்ராஜ், திரு இரா.

தாஸ், திரு சி.சேகர், திரு.மன்றம் நா.சண்முகநாதன், திரு கோ.காமராஜ், திரு சி.ஜெகநாதன், திரு டி.ஆர்.ஜான் வெஸ்லி, திரு C.அரசு மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளர் திரு.சாந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment