Breaking

Saturday, March 7, 2026

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு



ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு - தொகுப்பூதியம் பெறுவோருக்கு ரூ.1,250 அதிகரிப்பு

ரேஷன் கடை ஊழி யர்களுக்கு, 15 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், 3,039 ரூபாய் முதல் 7.330 ரூபாய் வரை ஊதியம் அதிகரிக்கும்.

தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பில், 35,000 ரேஷன் கடைகள் நடத்தப் படுகின்றன. அவற்றில், 22,804 விற்பனையாளர் கள், 3,216 எடையாளர்கள் என மொத்தம் 26,020 பேர் வேலை செய்கின்றனர்.

ரேஷன் கடை ஊழியர் களுக்கு, ஐந்து ஆண்டுக ளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த 2011 பிப்ரவரியில்ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,ஊதிய உயர்வு தொடர்பாக கூட்டுறவுத் துறை கூடு தல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் கடந்த ஆண்டு இறுதியில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக்குழு, விரிவான ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துக் களை கேட்டறிந்து, கடந்த மாதம் பரிந்துரையைசமர்ப்பித்தது.

அந்த பரிந்துரையை பரிசீலனை செய்த அரசு, ரேஷன் கடை ஊழியர்க ளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வு அறிவித்து, அதற் கான அரசாணையையும் நேற்று வெளியிட்டது.

என ரேஷன் கடை விற்ப னையாளருக்கு 3,039 ரூபாய் முதல் 7,330 ரூபாய் வரையிலும், எடையாள ருக்கு 2,706 ரூபாய் முதல் 7,430 ரூபாய் வரையிலும் ஊதியம் உயரும் அதிகாரிகள் கூறினர்.

அதேபோல, தொகுப் பூதியம் பெறும் ஊழி யருக்கு, 1,230 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களை அனுமதித்து தமிழக அரசு 2026 மார்ச் 5 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 26,020 பணியாளர்கள் (22,804 விற்பனையாளர்கள் மற்றும் 3,216 கட்டுனர்கள்) பயனடைவார்கள்.

திருத்தப்பட்ட ஊதிய விவரங்கள்:

ஊதிய உயர்வு கணக்கீடு: தற்போதுள்ள அடிப்படை ஊதியத்துடன் (Basic Pay) 15 சதவீதத்தை கூட்டி, அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி (Rounding off) புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

பணி மூப்பு அடிப்படையில்:

ஓராண்டு பணி முடித்து காலமுறை ஊதியத்திற்கு (Regular Pay Scale) மாறுபவர்களுக்கு ஊதிய விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விற்பனையாளர்கள் (Salesmen): பழைய ஊதியம் ₹8,600 – ₹29,000 என்பதிலிருந்து ₹9,900 – ₹39,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டுனர்கள் (Packers): பழைய ஊதியம் ₹7,800 – ₹26,000 என்பதிலிருந்து ₹9,000 – ₹35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய நியமனதாரர்களுக்கான தொகுப்பூதியம் (முதல் ஓராண்டு):

விற்பனையாளர்கள்: மாதம் ₹7,500.

கட்டுனர்கள்: மாதம் ₹6,600.

இதர சலுகைகள் மற்றும் படிகள்:

அகவிலைப்படி (DA): அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே அடிப்படை ஊதியத்தில் 55% அகவிலைப்படி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படி: மாதம் ₹300 மருத்துவப் படியாக வழங்கப்படும்.

சிறப்புப் படிகள்:

விற்பனையாளர்களுக்கு மாதம் ₹1,500 மற்றும் கட்டுனர்களுக்கு ₹1,200 சிறப்புப் படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்குத் தனிச் சிறப்புப் படிகள் வழங்கப்படும்.

ஆண்டு ஊதிய உயர்வு: ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது

TN revises pay, allowances for ration shop workers -

The Tamil Nadu government has revised the pay structure and allowances for fair price shop employees, including salesmen ...

Tamil Nadu Govt. announces pay revision for Ration shop ...

announces pay revision for Ration shop employees. staff. March 6, 2026. The Tamil Nadu Government has announced a revised pay stru... Ahead of polls, TN govt announces salary hike for ration shop ...

6 Mar 2026 — Ahead of polls, TN govt announces salary hike for ration shop employees. Chennai, Mar 6 (UNI) Ahead of the ensuing Assembly electi...

No comments:

Post a Comment