Breaking

Saturday, February 14, 2026

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் 40% தேர்ச்சி மதிப்பெண் என நிர்ணயித்து ஆணை வெளியிட வேண்டுதல்



Request to issue an order fixing the pass mark for all categories in the Special Teacher Eligibility Test as 40%. - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் 40% தேர்ச்சி மதிப்பெண் என நிர்ணயித்து ஆணை வெளியிட வேண்டுதல்

பெறுநர்

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,

சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்:ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தேர்ச்சி மதிப்பெண் -பொதுப்பிரிவினருக்கு 50%, மாற்றுத் திறனாளிகளுக்கு 40% குறைத்து அரசாணை வெளியிடவும் திருத்தியநேர்ச்சிப் பட்டியல் வெளியிடவும் கோருதல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் 40% தேர்ச்சி மதிப்பெண் என நிர்ணயித்து ஆணை வெளியிட வேண்டுதல் சார்பு

பார்வை

1:அரசாணை எண் 23. பள்ளிக் கல்வித் துறை (அடதே.வா) நாள் 28.01.2026.

2. பீகார் மாநில பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் PC 218/2025.

3.ஆந்திர மாநில பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 36, பள்ளிக் கல்வித் துறை நாள் 23-10-2025

4. TET NOTIFICATION FOR WORKING TEACHERS-13.02.2026

This letter is addressed to the Minister of School Education in Chennai, requesting a reduction in the Teacher Eligibility Test (TET) 2025 passing marks and the issuance of a revised passing list.

Request: Reduce TET passing marks to 50% for the general category and 40% for persons with disabilities.

Special Request: Establish a 40% passing mark for all categories in the Special Teacher Eligibility Test.

Reference: Mentions government orders from Tamil Nadu, Bihar, and Andhra Pradesh regarding teacher education policies. வணக்கம். பார்வை ல் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு மூலம் பெருவாரியான ஆசிரியப் பெருமக்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்காக தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒரு ஆசிரியர் கூட பாதிக்கப்படாமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தாங்கள் கூறியது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

அதனை செயல்படுத்தும் விதத்தில், தேர்ச்சிப் பட்டியல் வெளிவரும் போது பொதுப்பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற அனைவருக்கும் 5% மதிப்பெண் குறைத்து அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மற்ற அனைவருக்கும் மனமகிழ்வைத் தந்த அறிவிப்பு பொதுப்பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிளுக்கும் மன உளைச்சலையும், வருத்தத்தையுமே தந்தது. அனைவர் நலனையும் கருத்தில் கொண்டு பொதுப் பிரிவினருக்கு 75 மதிப்பெண்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு 60 மதிப்பெண்களும் தேர்ச்சிக்கான வரம்பாக நிர்ணயித்து, திருத்திய தேர்ச்சிப் பட்டியலை வெளியிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு தகுதித் தேர்வு மட்டுமே.பணி நியமனத்துக்கான தேர்வு அல்ல என்பதால் இட ஒதுக்கீட்டு விதிகள் இதற்கு பொருந்த வேண்டியது இல்லை. அனைத்துப் பிரிவினருக்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் 50 என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டு பணியிலுள்ள ஆசிரியர்கள் பயன் பெற நடவடிக்கை எடுக்க தங்களை அன்புடன் வேண்டுகிறோம்

This document is a request from the National Teachers' Association of Tamil Nadu to the government, acknowledging a recent reduction in passing marks for the Teacher Eligibility Test (TET) while highlighting concerns regarding the exclusion of certain groups from this benefit.

The association thanks the government for reducing the passing marks, allowing many teachers to pass.

They request the government to extend a 5% mark reduction to the general category and differently-abled individuals as well.

The association suggests setting a uniform passing mark of 60 for all categories, arguing that TET is only an eligibility test and not a recruitment exam.

No comments:

Post a Comment