Breaking

Wednesday, February 25, 2026

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி..



பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி - Law to protect women from sexual harassment at workplace - Training for teachers..

பள்ளிக்கல்வி - சமூக நலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013 ( தடுப்பு, தடை (ம) தீர்வு ) - இன் படி துறைத்தலைவர்கள் மற்றும் கிளை அலுவலக தலைமை அதிகாரிகள் இணையதளத்தில் அறிக்கை சமர்பித்தல் மற்றும் உள்ளக குழு (IC) மற்றும் பாதுகாப்பு பெட்டி செயல்பாடு, அதன் சட்டம் குறித்து பயிற்சி வழங்கும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளுதல் - தொடர்பாக,...

This document from the Dharmapuri District Chief Educational Officer outlines training regarding the Protection of Women from Sexual Harassment Act, 2013, for school principals.

Training covers using the SHe-Box portal (https://shebox.wcd.gov.in/), setting up Internal Committees (IC), and security boxes in schools.

Principals from all government and private high/higher secondary schools must attend on scheduled dates.

Training occurs at the Old District Rural Development Agency meeting hall on February 24th and 25th, 2026.

தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் திருவள்ளுவராண்டு 2057/விசுவாவசு/ மாசி - 11 ந.க.எண். 5275/அ6/2025, நாள்.23.02.2026

பொருள்

பார்வை

பள்ளிக்கல்வி சமூக நலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தடை (ம) தீர்வு) -இன் படி துறைத்தலைவர்கள் மற்றும் கிளை அலுவலக தலைமை அதிகாரிகள் இணையதளத்தில் அறிக்கை சமர்பித்தல் மற்றும் உள்ளக குழு (IC) மற்றும் பாதுகாப்பு பெட்டி செயல்பாடு, அதன் சட்டம் குறித்து பயிற்சி வழங்கும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளுதல் தொடர்பாக.

இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருத்து பாதுகாக்கும் சட்டம் 2023

2.சென்னை-05, சமூக நல ஆணையர் அவர்களின் தே.மு.க.எண். 12416/SHEW/2024, 03.04.2024.

3. தருமபுரி-05, மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடித ந.க.எண். 712/-DHEW/2024. 20.02.026. பார்வை 2-இல் காணும் நேர்முக கடிதத்தின்படி, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2013 (தடுப்பு, தடை (ம) -இன்படி, தருமபுரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான உள்ளூர் குழு (LC) மறுசீரமைப்பு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தருமபுரி மாவட்ட அளவில் உள்ளூர் குழு (LC) மற்றும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ளக குழு (IC) செயல்பாட்டில் உள்ளது.

பார்வை 3 இல் காணும் கடிதத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு https://shebox.wcd.gov.in/ என்ற இணையதளம் பயன்படுத்துவது குறித்தும். உள்ளக (குழு (IC) மற்றும் பாதுகாப்பு பெட்டி செயல்படுத்துவது குறித்தும் 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய நாட்களில் கீழ்கண்ட அட்டவணையின்படி பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே. அட்டவணையில் குறிப்பிட்டவாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் பயிற்சியில் தவறாது கலந்துக் கொண்டு பயிற்சி பெற்று மாதந்தோறும் இணையதளத்தை பயன்படுத்தி பதிவுகள் மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

கலந்துகொள்ளும் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரம்

அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைத்து தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள்

பயிற்சி நடைபெறும் இடம்

பழைய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கம்

CLICK HERE TO DOWNLOAD பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி

No comments:

Post a Comment