தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? Tamil Nadu Interim Budget 2026: What are the key announcements?
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர்கள் கல்லூரிகளில் பயிலும் போது மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.
பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப்படிப்பினைத் தொடர, மாதம் ரூ.2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் இதர நகர்ப்புரப் பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 59 நபர்களில் 52 நபர்கள், ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் ஆவர்.
தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.101 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 17 பிப்ரவரி 2026 அன்று தாக்கல் செய்தார். தேர்தல் ஆண்டான இதில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
முக்கிய துறைவாரியான ஒதுக்கீடுகள்:
பள்ளிக் கல்வித் துறை: ₹48,534 கோடி.
உயர்கல்வித் துறை: ₹8,505 கோடி.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை: ₹22,090 கோடி.
ஊரக வளர்ச்சித் துறை: ₹28,687 கோடி.
மின்சாரத் துறை: ₹18,091 கோடி.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை: ₹28,821 கோடி.
நெடுஞ்சாலைத் துறை: ₹21,132 கோடி.
முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள்:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: இத்திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்குத் தொடர்ந்து மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ₹14,412 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம்: இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிங் மெயின் பைப்லைன் திட்டம்: சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ₹3,109 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு: தகவல் தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்துவதன் மூலம் புதிதாக 25,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்: தூத்துக்குடியில் ₹5,200 கோடி செலவில் கப்பல் கட்டும் தளம் (Shipbuilding cluster) அமைக்கப்படும்.
கலாச்சாரம் மற்றும் விளையாட்டு: புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க ₹285 கோடியும், விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்கு ₹718 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன்: அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டங்களுக்கு முறையே ₹512 கோடி மற்றும் ₹492 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ₹2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிலை:
தமிழகத்தின் ஜி.எஸ்.டி.பி (GSDP) வளர்ச்சி 2024-25-ல் 11.19% ஆக இருந்துள்ளது.
மாநிலத்தின் மொத்தக் கடன் 2027 மார்ச் மாத நிலவரப்படி ₹10.71 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment