பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
இதில் பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவர்கள் 7,99,692, தனித் தேர்வர்கள் 27,783 என 8,27,475 பேர் எழுதவுள்ளனர். அதேபோல், பிளஸ் 1 அரியர் தேர்வை பள்ளி மாணவர்கள் 19,107 மற்றும் தனித் தேர்வர்கள் 5,944 என 25,051 பேர் வரை எழுதுகின்றனர்.
இந்நிலையில், பிளஸ் 2, பிளஸ் 1 அரியர் பாடத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று மதியம் வெளியானது.
இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறையின் http://dgeapp.tnschools.gov.in/ எனும் வலைத் தளத்தில் சென்று மாணவர்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
அதில் மாணவர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.
ஒரே ஹால்டிக்கெட்: அதே நேரம், தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
ஹால்டிக்கெட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு 12-ஆம் வகுப்பு (+2) பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று (23.02.2026) பிற்பகல் முதல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பதிவிறக்கம் செய்ய நேரடி இணையதளங்கள்:
தனித்தேர்வர்கள் (Private Candidates): DGE Tamil Nadu Official Website - இந்த இணையதளத்தில் உள்ள 'Hall Ticket' பிரிவின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
பள்ளி மாணவர்கள் (Regular Students): மாணவர்கள் நேரடியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாது. உங்கள் பள்ளிகள் மூலமாகவே ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்யும் முறை (தனித்தேர்வர்களுக்கு):
dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள 'Hall Ticket' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் 'HSE March 2026 Hall Ticket Download' என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளிடவும்.
விபரங்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2, 2026 முதல் மார்ச் 26, 2026 வரை நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. +2 ஹால் டிக்கெட் இன்று (23.02.2026) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்ய Direct Link...
நடைபெறவுள்ள மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்விற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் (Hall Tickets). மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 23.02.2026 அன்று பிற்பகல் முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்er User ID, Password-ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு (Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.
This document from the Directorate of Government Examinations, Chennai, informs school authorities about downloading hall tickets for the March 2026 Higher Secondary Examinations (first year arrear and second year).
Hall tickets for March 2026 Higher Secondary exams can be downloaded starting from the afternoon of February 23, 2026.
School Headmasters must download the hall tickets for their students from the official website using their credentials.
Chief Educational Officers are instructed to ensure all relevant Headmasters are informed to download the hall tickets promptly.


No comments:
Post a Comment