reports on demands made by the Tamil Nadu Graduate Teachers' Association at a district executive committee meeting in Pudukkottai.
The association insists on monitoring and correcting headmasters who act in a dictatorial manner towards teachers.
Key points:
The association demands action against dictatorial headmasters.
A protest is planned for January 12 regarding withheld selection status for teachers with 10 years of service.
They call for medical leave deductions to be added back to savings accounts.
The group rejects pressure on teachers under the guise of skill assessment
ஆசிரியர்களை சர்வாதிகாரப் போக்குடன் நடத்தும் தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து சரி செய்ய பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை டிச. 17: ஆசிரியர்களை சர்வா திகாரப் போக்குடன் நடத்தும் தலைமை ஆசி ரியர்களைக் கண்காணித்து சரி செய்ய வேண் டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத் தியுள்ளது. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கழகத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மா னங்கள்: 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற ஆசிரி யர்களுக்கு விதிமுறைகளுக்குப் பொருந்தாத காரணங்களைக் கூறி தேர்வு நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஜன. 12-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலத்தில் காத்திருப் புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டது.
மருத்துவ விடுப்பு எடுத்தவர்களுக்கு கழிக் கப்பட்ட ஈட்டிய விடுப்பை சேமிப்புக் கணக் கில் சேர்க்க வேண்டும். ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்கள் சர் வாதிகாரப் போக்குடன் நடத்துவதைப் பள் ளிக் கல்வித் துறை நிர்வாகம் கண்காணித்து சரிசெய்ய வேண்டும்.
திறன் மதிப்பீடு என்ற அடிப்படையில் பல்வேறு நெருக்கடிகளை ஆசிரியர்களுக்கு கொடுப்பதை ஏற்க இயலாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருவாய் மாவட்டத்துக்குள் அவர் கள் விரும்பும் மையத்தில் பட்டதாரி ஆசிரி யர்கள் மதிப்பீடு செய்ய நியமிக்க வேண்டும்.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் க. ஜெ யராம் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் மா. குமரேசன், மாநில மகளிர் அணிச் செயலர் தூ. வாசுகி, மாவட்டச்செய லர் சு.ரா. சுரேஷ், மாவட்டப் பொருளாளர் சா.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

No comments:
Post a Comment