Order to record details of higher education guidance classes held on EMIS platform - Director Proceedings - உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெற்ற விவரத்தை EMIS தளத்தில் பதிவு செய்ய உத்தரவு - Director Proceedings
தமிழ்நாடு, மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர் திரு.இரா.சுதன்,இ.ஆ.ப(ஓ) 05. 05. order 900/L1/CG/MS/2025, 10.2025
பொருள்:
உயர்கல்வி வழிகாட்டி 202526 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத் திட்டம் மற்றும் வகுப்பு சார்ந்த விவரங்களை கண்காணிப்பதற்கான முன்னெடுப்பு மற்றும் வகுப்பு நடைபெறுவதனை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து
பார்வை இவ்வலுவலக கடிதம் ந.க. எண் 1292, ஆ.2.நா.மு 14,ஒபக 2024, நாள்: 26.07.2024 2. क. . . : 960/L1/CG-17/MS/2025, 10.06.2025
உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் புதன் கிழமைகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில் வெள்ளிக் கிழமைகளிலும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுவதனை உறுதி செய்திடும் வகையில் ஒவ்வொரு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகளின் முடிவில் வகுப்புகள் நடைபெற்றதற்கான தகவல்கள் (தேதி. பாடத் தலைப்பு) மற்றும் புகைப்படத்தினை EMIS இணைய தளத்தில் பதிவிடுதல் வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பதிவிடக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறுகின்றனவா என உறுதி செய்ய இயலும்.
CLICK HERE TO DOWNLOAD higher education guidance classes held on EMIS platform - உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெற்ற விவரத்தை EMIS தளத்தில் பதிவு செய்ய உத்தரவு - Director Proceedings PDF
No comments:
Post a Comment