வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: இணையதளத்தில் வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு
தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளின் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, கடந்த நவம்பர் 4-ம் தேதி வீடு வீடாக கணக்கீட்டுப்படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. கணக்கீட்டுப்படிவம் விநியோகித்தல், பூர்த்தி செய்து பெறுதல் மற்றும் பதிவு செய்யும் பணிகள் ஆகியவை டிச.4-ம் தேதி முடிவடைய இருந்தது.
ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, கணக்கீட்டு படிவம் பெறுவதற்கான அவகாசம் டிச.11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு வந்தது. மேலும், அத்துடன், கணக்கீட்டுப்படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. டிச.11-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகிக்கும் பணி, பூர்த்தி செய்து பெற்ற படிவங்களைப் பதிவேற்றும் பணி ஆகியவை 100 சதவீதம் முடிந்ததாக அறிவிக்கப்பட் டிருந்தது.
இந்நிலையில், இறந்தவர்கள், இரட்டை பதிவுகள், முகவரி மாறியவர்கள் விவரங்களை இறுதி செய்வதில் சிக்கல் எழுந்ததால், டிச.11-ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம், கணக்கீட்டுப் படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் பணிகளுக்கு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் அதாவது, டிச.14-ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
இதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி (இன்று) வெளியாக உள்ளது. இன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும்.
சென்னை தலைமைச்செயல கத்தில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பிற்பகல் 2 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்படுகிறது. வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதள பக்கத்தில் தங்கள் விவரங்கள் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது As part of the Special Intensive Revision (SIR), the draft electoral roll will be published on 19.12.2025. (Special Intensive Revision SIR)ன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியீடு
செய்தி வெளியீடு
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision SIR) நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs), மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகியபோதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை (ASD பட்டியல்கள்) தயாரித்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (BLAS) நடத்தப்பட்ட கூட்டங்களில் அவர்களுக்கு பகிரப்பட்டுள்ளன. இக்கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் BLO App-ல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ASD பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையை உறுதி செய்துகொள்வதற்காகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர். இறந்தவர்கள். கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent). இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் (ASD பட்டியல்கள்) இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் (DEO) இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
அர்ச்சனா பட்நாயக்.
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும்
அரசு செயலாளர்.
press release from the Chief Electoral Officer and Government Secretary regarding the Special Intensive Revision (SIR) of the electoral roll in Tamil Nadu. The draft electoral roll is scheduled for publication on December 19, 2025.
The Special Intensive Revision of the electoral roll is underway across Tamil Nadu as per the instructions of the Election Commission of India. The draft electoral roll will be published on December 19, 2025.
Lists of voters marked as Absent, Shifted, or Deceased (ASD) have been prepared and shared with Booth Level Agents (BLAs) of recognized political parties.
After the draft publication, facilities to access details of voters in the ASD lists will be provided on the websites of the respective District Election Officers (DEOs).


No comments:
Post a Comment